அல்லைப்பிட்டிக்கு பெருமை சேர்த்த،சென்பிலிப்ஸ் விளையாட்டுக்கழகம்-விபரங்கள் படம் இணைப்பு!

அல்லைப்பிட்டிக்கு பெருமை சேர்த்த،சென்பிலிப்ஸ் விளையாட்டுக்கழகம்-விபரங்கள் படம் இணைப்பு!

1535761_331500856989146_850012232_nகடந்த வாரம் தீவகத்தில் அனைத்து விளையாட்டுக் கழகங்களும் கலந்து கொண்ட-மட்டுப்படுத்தப்பட்ட கிறிகெற் போட்டியில்  கலந்து கொண்ட அல்லைப்பிட்டி சென்பிலிப்ஸ் விளையாட்டுக் கழக வீரர்கள்-சிறப்பாக விளையாடி சாம்பியன் பட்டத்தையும்-வெற்றிக்கிண்ணத்தையும் தமதாக்கிக் கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.அத்தோடு கடந்த வருடமும் தீவகத்தில் நடைபெற்ற-பல உதைபந்தாட்டப் போட்டிகளில் கலந்து கொண்டு பலமுறை பரிசுகளையும்-பாராட்டுக்களையும் பெற்று அல்லைப்பிட்டிக்கு பெருமைசேர்த்து வருகின்றது-அல்லைப்பிட்டி சென்பிலிப்ஸ் விளையாட்டுக்கழகம்.

தீவகத்தில் தலைசிறந்த விளையாட்டு வீரர்களை தன்னகத்தே கொண்டு-தொடர் வெற்றிகளை குவித்து- அல்லைப்பிட்டிக் கிராமத்திற்கு பெருமை சேர்த்து வரும்-அல்லைப்பிட்டி சென்பிலிப்ஸ் விளையாட்டுக்கழகத்தின் வீரர்களை வாழ்த்தி வரவேற்போம் வாருங்கள்.

Leave a Reply

WordPress Appliance - Powered by TurnKey Linux