தீவகத்தில் பிரசித்தி பெற்ற,மண்கும்பான் வெள்ளைப்புற்றடி ஸ்ரீவீரகத்தி விநாயகப் பெருமானுக்கு-அழகுற அமைக்கப்படவுள்ள-ஏழுதள இராஜகோபுரத்திற்கான அடிக்கல் நாட்டும் வைபவம் 22-01-2014 புதன்கிழமை காலை மிகச்சிறப்பாக நடைபெற்றதாக எமது செய்தியாளர் அறிவித்துள்ளார்.
வடமாகாணத்தில் பிரபலமான ஸ்தபதி சிற்பக சிந்தாமணி அராலி நவரட்ணம் கங்கைரூபன் (ஆலய கட்டிட சுதை,கருங்கல் சிற்ப வர்ண ஒப்பந்தக்காரர்)அவர்களினால் 21 மாத கால ஒப்பந்த அடிப்படையில் வெள்ளைப்புற்றடி ஸ்ரீ வீரகத்தி விநாயகப்பெருமானுக்கு ஏழுதள இராஜகோபுரம் மிக விரைவாக கட்டி முடிக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
புதன்கிழமை காலை நடைபெற்ற-அடிக்கல் நாட்டும் வைபவத்தில்-சமயப் பெரியோர்கள்-சமூக ஆர்வலர்கள்-ஆலயநிர்வாகத்தினர்-வேலணை பிரதேச செயலர்-வேலணை பிரதேசசபை தவிசாளர்-பாடசாலை மாணவர்கள்-பொதுமக்கள் என அதிகமானோர் கலந்து கொண்டதாக மேலும் தெரிவிக்கப்படுகின்றது.
அல்லையூர் இணையத்தினால் வீடியோ மற்றும் நிழற்படங்கள் பதிவு செய்யப்பட்டன.
வீடியோப்பதிவு மிக விரைவில் இணைக்கப்படும்.
நன்றி-திரு தனதீபன் சிவலோகநாதன்