அல்லைப்பிட்டி பராசக்தி வித்தியாலயதில் முதலாம் தரத்திற்கு மாணவர்களை சேர்த்துக்கொள்ளும் கால்கோள் விழா வியாழக்கிழமை அன்று வெகு சிறப்பாக நடைபெற்றது.
இலங்கையில் உள்ள அனைத்து பாடசாலைகளிலும் இந்த வைபவம் நடத்தப்படவேண்டுமென்று கல்வித்திணைக்களத்தினால் ஏற்கனவே அறிவிக்கப்பட்டு-ஒவ்வொரு வருடமும் தைமாதம் இவ்விழா நடத்தப்படுகின்றது.
அல்லைப்பிட்டி பராசக்தி வித்தியாலயத்தில் நடைபெற்ற-கால்கோள் விழாவிற்கு-பாடசாலை அதிபர் திரு கே.பத்மநாதன் அவர்கள் தலைமை தாங்கினார்.சிறப்பு விருந்தினராக அல்லைப்பிட்டி கிராமசேவையாளர் திரு சின்னத்துரை இரட்ணேஸ்வரன் அவர்கள் கலந்து கொண்டார்.மாணவர்களின் கலைநிகழ்ச்சிகள் இடம்பெற்றதுடன் மாணவர்களுக்கு பரிசுகளும் வழங்கப்பட்டதாக-எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.