கடந்த வாரம் ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினரின் நிதியிலிருந்து தீவக பொதுஅமைப்புக்களுக்கு உதவிகள் வழங்கப்பட்டன-வேலணை பிரதேச செயலகத்தில் நடைபெற்ற -உதவிகள் வழங்கும் இந்நிகழ்வில்-பாராளுமன்ற உறுப்பினர் திரு சில்வேஸ்ரின் உதயன் அவர்களுடன்-வேலணை பிரதேச செயலர் மற்றும் வேலணை பிரதேசசபை தவிசாளர்-மற்றும் அல்லைப்பிட்டி கிராம சேவையாளர் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.
அல்லைப்பிட்டியில் இயங்கும் இரண்டு விளையாட்டுக் கழகங்களான-சென்பிலிப்ஸ் -சிறிமுருகன் விளையாட்டுக்கழகங்களின் தலைவர்கள் மற்றும் உறுப்பினர்களும் இந்நிகழ்வில் கலந்து கொண்டு விளையாட்டுப் பொருட்களைப் பெற்றுக் கொண்டதாக எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.