உலங்கு வானூர்த்தி பூச்சொரிய-இலட்சக்கணக்கான பக்தர்களின் அரோகரா கோசத்துடன் தேரேறிபவனிவந்த நல்லூர் முருகன்-படங்கள் வீடியோ இணைப்பு!

வரலாற்று சிறப்புமிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த இரதோற்சவ திருவிழா- இன்றைய தினம் 04-09-2013 புதன் காலை இனிதே நடைபெற்றது. 


வசந்தமண்டபப் பூசையைத் தொடர்ந்து முருகப்பெருமான் இரதமேறி இருப்பிடத்தை விட்டு வீதிவலம் வந்த கண்கொள்ளாக்காட்சியினை இலட்சக்கணக்கான பக்தர்கள் கண்டு களித்தனர்.

//www.youtube-nocookie.com/v/V_I3NiymGBY?version=3&hl=fr_FR


இன்றைய இரதோற்சவ திருவிழாவை பல்வேறு உள்நாட்டு வெளிநாட்டு இலத்திரனியல் ஊடகங்கள் நேரடியாக ஒலி ஒளிபரப்பு செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.


உள்நாட்டிலிருந்து மட்டுமல்லாமல் உலகின் பல்வேறு பகுதிகளிலுமிருந்து வருகை தந்திருந்த பக்தர்கள் உள்ளிட்ட பல்லாயிரக்கணக்கானோர் திருவிழாவில் கலந்து கொண்ட அதேவேளை, பக்தர்கள் தமது நேர்த்திக் கடன்களையும் நிறைவேற்றிக் கொண்டனர்.


கடந்த மாதம் 12 ம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகிய வருடாந்த உற்சவத்தில் இன்றையதினம் இரதோற்சவமும் நாளைய தினம் தீர்த்தோற்சவமும், நாளை மறுதினம் பூங்காவனமும் இடம்பெற்று வருடாந்த மகோற்சவத்திருவிழா நிறைவு பெறவுள்ளது.


Leave a Reply

WordPress Appliance - Powered by TurnKey Linux