அல்லைப்பிட்டியைச் சேர்ந்த،பெரியவர் சின்னத்துரை சிவஞானம் ஜயா அவர்களுடன் ஒரு உருக்கமான நேர்காணலின்-வீடியோ நிழற்படங்கள் இணைப்பு!

DSC_0293

அல்லைப்பிட்டியைச் சேர்ந்த-பெரியவர் சின்னத்துரை சிவஞானம் ஜயா அவர்களை-அல்லையூர் இணையத்தின் சார்பிலும்-அல்லைப்பிட்டி மக்கள் சார்பிலும் பிரான்சில் உள்ள அவரது இல்லத்தில் 24-12-2013 சனிக்கிழமை அன்று சந்தித்து  அவருக்கு பொன்னாடை அணிவித்து ஆசிர்வாதம் பெற்று உரையாடி அகமகிழ்ந்தோம்.

அல்லைப்பிட்டியை-பிறப்பிடமாகவும்-திருமணம் செய்யும் வரை வசிப்பிடமாகவும்-கொண்டிருந்த,பெரியவர் சிவஞானம் ஜயா அவர்கள்-ஒரு சிறந்த விவசாயியாகவும்-மேடைப்பேச்சாளராகவும்-நாடகநடிகராகவும்-வலம் வந்தவர்.அத்தோடு தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் திரு சிறிதரன் அவர்களின் தந்தையும்-இணைய உலகில் அதிகளவு தமிழ்மக்களால் பார்வையிடப்பட்டு வரும் லங்காசிறி-மனிதன் ஆகிய இணையத்தளங்களைின் உரிமையாளர்களின் தந்தையும் என்ற பெருமைக்கும் புகளுக்கும் உரியவர் பெரியவர் சிவஞானம் ஜயா அவர்கள்-

அத்தோடு எங்கள்  அல்லைப்பிட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் என்ற காரணத்துடன் சேர்ந்தே-அவரை அவரது இல்லம் தேடிச் சென்று கலந்துரையாடினோம். அவர் தான் பிறந்து வளர்ந்த அல்லைப்பிட்டி கிராமத்து நினைவுகளை  கண்கலங்கியவாறு எங்களுடன் பகிர்ந்து கொண்டார்.

அவரோடு உரையாடிய அந்த சில நிமிடங்களையும்-உங்கள் பார்வைக்காக கீழே பதிவு செய்துள்ளோம்.

இது தொழில்நுட்பத்தால் தரமான பதிவாக அமையாவிட்டாலும்-காலத்தால் பாதுகாக்க வேண்டிய பதிவாகும் என்பதனை தெரிவித்துக்கொள்கின்றோம்.

DSC_0290

DSC_2695

DSC_2691

Leave a Reply

WordPress Appliance - Powered by TurnKey Linux