அல்லைப்பிட்டி புனித பிலிப்புநேரியார் ஆலய பங்கைச் சேர்ந்த,பதினொரு சிறுவர் சிறுமியர்கள் -முதல்நன்மை திருவருட்சாதனத்தை கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்னர் பெற்றுக் கொண்டனர்.நீண்ட நாள் ஆயத்த வகுப்புக்களின் பின்னர் இவர்களுக்கான முதல்நன்மை வழங்கும் திருப்பலி-மண்டைதீவு அல்லைப்பிட்டி பங்குத்தந்தை M.பத்திநாதர் அவர்களின் தலைமையில் அல்லைப்பிட்டி புனித பிலிப்புநேரியார் ஆலயத்தில் ஒப்புக்கொடுக்கப்பட்டது.திருப்பலியின் பின்னர் இவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கும் நிகழ்வும்-அதனைத் தொடர்ந்து ஆயத்த வகுப்புக்களை நடாத்திய ஆசிரியர்களுக்கு நன்றி செலுத்தும் நிகழ்வும் நடைபெற்றது.
இச்செய்தி ஞானஸ்ஞானம் வழங்கப்பட்டதாக-தவறுதலாக முன்னர் இங்கு பதிவாகியிருந்தமைக்காக மனம் வருந்துகின்றோம்.