அல்லைப்பிட்டி கறண்டப்பாய் சிறிமுருகன் ஆலயத்தில் நடைபெற்ற-திருவெம்பாவையின் நிழற்படத்தொகுப்பு!

அல்லைப்பிட்டி கறண்டப்பாய் சிறிமுருகன் ஆலயத்தில் நடைபெற்ற-திருவெம்பாவையின் நிழற்படத்தொகுப்பு!

1481858_1431098430452721_1187357385_n

திருவெம்பாவை விரதத்தின் இறுதி நாளான புதன்கிழமை காலை அல்லைப்பிட்டி கறண்டப்பாய் சிறிமுருகன் ஆலயத்தில் திருவாதிரை சிறப்புப் பூஜைகள் நடைபெற்றன.  எமது செய்தியாளரினால் அனுப்பி வைக்கப்பட்ட நிழற்படங்களை உங்களின் பார்வைக்காக-கீழே இணைத்துள்ளோம்.

திருவெம்பாவையினை முன்னிட்டு-கொழும்பு மாநகரில் அமைந்துள்ள-புகழ்மிகு சிவாலயமான கொச்சிக்கடை ஸ்ரீ பொன்னம்பலவானேஸ்வரர் ஆலயம், தீவகத்தில் பிரசித்திபெற்று வரும் மண்டைதீவு திருவெண்காடு சித்திவிநாயகர் ஆலயம் –மட்டக்களப்பு களுவாஞ்சிக்குடி மாணிக்கப்பிள்ளையார் ஆலயம், பட்டிருப்பு சித்திவிநாயகர் ஆலயம் மற்றும் எருவில் அரசடிப்பிள்ளையார் ஆலயம், ஆகிய ஆலயங்களில் திருவெம்பாவை பூசைகள் வெகு சிறப்பாக நடைபெற்றது.

அத்தோடு யாழ்ப்பாணம் காரைநகர் சிவன் கோவில், கல்முனை குடியிருப்பு ஸ்ரீமுத்துவிநாயகர் ஆலயம், திருக்கோவில் விநாயகபுரம் சித்திவிநாயகர் ஆலயம் என் பல  ஆகியவற்றில் திருவாதிரை தீர்த்தோற்சவமும் இடம்பெற்றது.

ஆதியும் அந்தமும் இல்லாத அரும்பெருஞ்சோதி’ ஆக உலகமெங்கும் வியாபித்து அருள்பாலித்து கொண்டிருக்கும் சிவபெருமானின் அருள்வேண்டி திருவாதிரை பூஜைகள் அனைத்து இந்து ஆலயங்களிலும் இடம்பெற்றன.

இன்றையதினம் திருவெம்பாவை விரதம் நிறைவு பெற்று மார்கழி திருவாதிரை ஆரம்பமாகின்றது.

1479574_1431098130452751_888379951_nஆதியும் அந்தமும் இல்லா அருட்பெருஞ்

சோதியை யாம்பாட கேட்டேயும் வாள்தடங்கண்

மாதே வளருதியோ! வன்செவியோ ? நின் செவிதான்

மாதேவன் வார்கழல்கள் வாழ்த்திய வாழ்த்தொலி போய்
வீதிவாய் கேட்டலுமே விம்மி விம்மி மெய்ம்மறந்து
போதார் அமளியின் மேல் நின்றுங் புரண்டிங்ஙன்
ஏதேனும் ஆகாள் கிடந்தாள் என்னே என்னே
ஈதே எம் தோழி பரிசேலோ ரெம்பாவாய்! …….(1)
திருவெம்பாவை-02

 பாசம் பரஞ்சோதிக் கென்பாய் தீராப்பகல் நாம்
பேசும்போது எப்போது இப்போதார் அமளிக்கே
நேசமும் வைத்தனையோ நேரிழையே? நேரிழையீர்
சீ! சீ! இவையும் சிலவோஏசும் இடமீதோ? விண்ணோர்கள்
ஏத்துதற்குக்கூசும் மலர்ப்பாதந் தந்தருள வந்தருளும்
தேசன் சிவலோகன் தில்லைச் சிற்றம்பலத்துள்
ஈசனார்க்கன்பார்? யாம் ஆரேலோர் எம்பாவாய் ……(2) 

1474913_1431098357119395_1790546723_n 1474703_1431097900452774_2146571304_n
1527986_1431098560452708_957012733_n 1488600_1431098033786094_793579563_n 1476796_1431098230452741_2099619470_n

Leave a Reply

WordPress Appliance - Powered by TurnKey Linux