அல்லையூர் இணையத்தின் அனுசரணையுடன்-அல்லைப்பிட்டி வாகீசர் சனசமுக நிலையத்தில் -அல்லைப்பிட்டி மெதடிஸ்த திரு அவையின் போதகர் கருணைராஜ் அவர்களின் மேற்பார்வையில்- பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் உயர்தரம் கற்ற மாணவர்களினால் நடத்தப்பட்டு வரும் மாலைநேரவகுப்பு மாணவர்களின் நலன் கருதி-இவர்களுக்கான பரீட்சைகள் மிக நேர்த்தியாக கடந்த வெள்ளி -சனி-அன்று நடத்தப்பட்டன.இரண்டு பிரிவுகளாக நடத்தப்பட்ட இப்பரீட்சைகளில் 42 மாணவ மாணவிகள் தோன்றி பரீட்சை எழுதினார்கள்.
மிகவும் கல்வியில் பின்தங்கியுள்ள-இப்பகுதி மாணவர்களின் எதிர்கால கல்வி முன்னேற்றத்திற்காக-ஆரம்பிக்கப்பட்டுள்ள-இந்த மாலை நேர வகுப்புக்களின் மூலம் எதிர்காலத்தில் இப்பகுதி மாணவர்களின் கல்வி அறிவினை தரம் உயர்த்துவதே எமது நோக்கமாகும் என்பதனை புலம் பெயர் அல்லைப்பிட்டி மக்களுக்கு அறியத்தருகின்றோம்.