
இப்பணியின் அடுத்த கட்ட வளர்ச்சியாக,யாழ் தீவகத்தில் முதியோர் இல்லம் ஒன்றை அமைக்கும் பணிகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
இக்கட்டிட நிதிக்கான அனுசரணையினை,உள்ளூரிலும்,புலம்பெயர் நாடுகளிலும்,வசிக்கும்-கருணை உள்ளங்களிடம் இருந்து எதிர்பார்த்து நிக்கின்றோம்.
கருணை உள்ளங்களினால் 30 லட்சம் ரூபாக்கள் வரை வழங்கப்பட்டுள்ளது-என்பதனை நன்றி கலந்த மகிழ்ச்சியோடு அறியத்தருவதுடன், நீங்களும்,உங்களால் முடிந்த நிதியினை வழங்கி,தீவகம் மண்கும்பானில் அமையவுள்ள,அன்னை சிவகாமிப்பிள்ளை முதியோர் இல்ல கட்டிடத்திற்கு உரமாவீர்கள் என நம்பி நிற்கின்றோம்.
