நெடுந்தீவிலிருந்து புறப்பட்ட 100இற்கும் மேற்பட்ட பயணிகளின் உயிர் தெய்வாதீனமாக காப்பாற்றப்பட்டது-முழு விபரம் இணைப்பு!

நெடுந்தீவிலிருந்து புறப்பட்ட 100இற்கும் மேற்பட்ட பயணிகளின் உயிர் தெய்வாதீனமாக காப்பாற்றப்பட்டது-முழு விபரம் இணைப்பு!

தீவகம் நெடுந்தீவு – குறிகட்டுவான் இடையிலான கடற்போக்குவரத்து சேவை இடம்பெற்றபோது பாரிய அசம்பாவிதம் மயிரிழையில் தவிர்க்கப்பட்டது.
புதன்கிழமை (05.01.2022) காலை 07.00 மணியளவில் 100 இற்கும் மேற்பட்ட பயணிகளுடன் புறப்பட்ட பலநோக்கு கூட்டுறவுச் சங்கத்தின் சமுத்திர தேவி படகின் சுக்கான் தடி உடைந்து இடை நடுவில் பழுதடைந்த நிலையில் பின்னர் வடதாரகை படகின் உதவியுடன் பல இடையூறுகளுக்கு மத்தியில் குறிகட்டுவான் நோக்கி இழுத்துச் செல்லப்பட்டது.


குறித்த படகானது காலை 10.00 மணியினை அண்மித்தே குறிகட்டுவான் இறங்கு துறைமுகத்தை வந்தடைந்தது .

100 மேற்பட்ட பயனிகளுடன் சமுத்திரதேவா இடைநடுவில்…..
நெடுந்தீவு குறிகட்டுவான் இடையிலான கடற்போக்குவரத்து சேவை காலகலமாக பல்வேறு இன்னல்களை தோற்றுவித்து வருகின்றது. குறிப்பாக அண்மைக்காலமாக சரியான திட்டமிடல்கள் மற்றும் வழிகாட்டல்கள் இன்றி போக்குவரத்து சேவைகள் இடம் பெறுவதாகவும் நெடுந்தீவு கடற்போக்குவரத்துக்கு யார் பொறுப்பு என்பதும் மக்களது கேள்வியாக காணப்படுகின்றது.
இன்றைய தினம் 100ற்கு மேற்பட்ட பயணிகளுடன் காலையில் புறப்பட்ட பலநோக்கு கூட்டுறவுச் சங்கத்தின் சமுத்திர தேவா படகு இடை நடுவில் பழுதடைந்த நிலையில் பின்னர் வடதாரகைப் படகின் உதவியுடன் குறிகட்டுவான் நோக்கி இழுத்து செல்லப்பட்டது. ஆயினும் சுக்கான தடி உடைந்தமையினால் இடைநடுவில் பயனிகளை வடதாரகைப்படகிற்கு மாற்ற முடியாத நிலையிலும் பல இடையூறுகள் மத்தியிலும் வடதாரகைப்படகு இழுத்து செல்லப்படுகின்றது.
குறிப்பிட்ட நேர அட்டவணை இன்றி போக்குவரத்துக்கள் தற்போது இடம் பெறுவதாகவும் சுற்றுலாப் பயணிகளுக்கு முன்னுரிமை கொடுத்து வடதாரகைப் படகுச் சேவை இடம் பெறுவதாகவும் மக்கள் குற்றம் சுமத்துக்கின்றனர்.
நெடுந்தீவு மக்கள் போக்குவரத்திற்கு பதிவுகள் மேற்கொள்ளப்படுகின்ற போது சுற்றுலாப்பயணிகளுக்கு சில சமயங்களில் பதிவுகள் ஏதும் இன்றி பிறிதொரு பாதையினால் அனுப்பப்படுவதாகவும் குறிப்பாக வடதாரகைப் படகிற்கு விடுமுறை வழங்கப்படுகின்ற போதும் திடிரென போக்குவரத்து சேவை இ.டம் பெறுவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. தொடர்சியாக கிழமையின் ஏழு நாட்களும் வடதாரகைப் போக்குவரத்து இடம் பெறுமா என்பதும் கேள்வியாகவே காணப்படுகின்றது.
நெடுந்தீவு குறிகட்டுவான் இடையிலான கடற்போக்குவரத்து யாருடைய பொறுப்பில் காணப்படுகின்றது இதற்கான தீர்மானங்களை யார் மேற்கொள்ளுகின்றார்கள் என்பது இன்று வரை மக்கள் கேள்வியாக காணப்படுகின்றது.

Leave a Reply

WordPress Appliance - Powered by TurnKey Linux