
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய, எல்லாம் வல்ல, மண்கும்பான் வெள்ளைப்புற்றடி வீரகத்தி விநாயகப் பெருமானை வேண்டி நிற்கின்றோம்.
ஓம் சாந்தி…
மண்கும்பான் வெள்ளைப்புற்றடி வீரகத்தி விநாயகர் ஆலயத்தில், நீண்ட காலமாக, தொண்டாற்றி வந்தவரும்,மண்கும்பானில் ஞானவைரவர் உட்பட ஆலய பணிகளில்,தன்னை ஈடுபடுத்திக் கொண்டவருமான, மண்கும்பான் 4ம் வட்டாரத்தைச் சேர்ந்த,திரு நல்லையா கணேஸ்வரன் (கணேஷ்) அவர்கள், கடந்த சில தினங்களுக்கு முன்னர், மண்கும்பான் வெள்ளைப்புற்றடி வீரகத்தி விநாயகர் ஆலயத்தில், பராமரிக்கப்பட்டு வந்த,காளை மாடு ஒன்று எதிர் பாராதவிதமாக, வயிற்றுப் பகுதியில் குத்தியதால், படுகாயம் அடைந்த நிலையில், யாழ் போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டு, சிகிச்சை பலனின்றி,04.01.2022 அன்று உயிரிழந்ததாக தெரியவருகிறது.
அன்னாரின் இறுதி நிகழ்வுகள்,05.01.2022 புதன்கிழமை அன்று மண்கும்பானில் நடைபெற்றது.
அமைதியான சுபாவம் கொண்ட, திரு நல்லையா கணேஸ்வரன் அவர்களின் திடீர் மறைவு, மண்கும்பான் மக்களை பெரும் துயரில் ஆழ்த்தியதுள்ளதாக தெரிய வருகின்றது.
பிள்ளையாரின் தொண்டரை,குத்தி பலியாக்கிய, காளையினை உடனடியாக யாழ்ப்பாணத்தில் இயங்கும்,மாட்டுப்பண்ணை ஒன்றுக்கு வழங்கப்பட்டுள்ளதாக பிள்ளையார் கோவில் நிர்வாக உறுப்பினர் ஒருவர் எமது இணையத்திற்கு தெரிவித்தார்.



