இலங்கையில் 2 குழந்தைகள் உள்ளிட்ட தமிழ் குடும்பத்தைச் சேர்ந்த,  5 பேர் தீயில் கருகி பலி-விபரம் இணைப்பு!

இலங்கையில் 2 குழந்தைகள் உள்ளிட்ட தமிழ் குடும்பத்தைச் சேர்ந்த, 5 பேர் தீயில் கருகி பலி-விபரம் இணைப்பு!

நுவரெலியா மாவட்டத்தில், இராகலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட – இராகலை முதலாம் பிரிவு தோட்டத்தில் இடம்பெற்ற தீ விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த ஐவர் பலியாகியுள்ளனர்.
தாய் (32) அவரது மகள் (11), குழந்தை (01) மற்றும் குழந்தைகளின் தந்தை (60), பாட்டி (55) ஆகியோரே இவ்வாறு தீயில் உடல் கருகி உயிரிழந்துள்ளனர்.
நேற்றிரவு (07) 10.00 மணியளவில் இடம்பெற்ற இப்பரிதாபகரமான சம்பவத்தில், உயிரிழந்தவர்கள் ஆர். ராமையா 60 வயது, அவரின் மனைவியான முத்துலெட்சுமி வயது 55, இவர்களின் மகள் டிவனியா வயது 32, குறித்த மகளின் பிள்ளைகள் இருவர் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

2 குழந்தைகள் உள்ளிட்ட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் தீயில் பலி-Fire Accident-5 Died Including 2 Children in Same Family
2 குழந்தைகள் உள்ளிட்ட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் தீயில் பலி-Fire Accident-5 Died Including 2 Children in Same Family

உயிரிழந்த பெண்ணின் கணவரான ரவீந்திரன், குறித்த வேளையில் வீட்டில் இல்லாத நிலையில் உயிர் தப்பியுள்ளார் என்பது குறிப்பிடதக்கது.
இராகலை, முதலாம் பிரிவு தோட்டத்தில் தற்காலிகமாக அமைக்கப்பட்ட வீடொன்றிலேயே இவ்வாறு தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதற்கான காரணம் கண்டறியப்படவில்லை.
2 குழந்தைகள் உள்ளிட்ட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் தீயில் பலி-Fire Accident-5 Died Including 2 Children in Same Family
பல்வேறு கோணங்களில் பொலிஸ் விசாரணைகள் தொடர்கின்றன.

Leave a Reply

WordPress Appliance - Powered by TurnKey Linux