
அன்னதானப்பணி….1732
யாழ் தீவகம் அல்லைப்பிட்டியைச் சேர்ந்த, அமரர் செல்லத்துரை (உடையார்) நடேசபிள்ளை அவர்களின் 2ம் ஆண்டுத் திதியை முன்னிட்டு,
சிவா அன்னதான அறக்கட்டளையின் ஏற்பாட்டில்,03.09.2021 ஞாயிற்றுக்கிழமை அன்று கிளிநொச்சியில் அமைந்துள்ள,மகாதேவா சுவாமிகள் சிறுவர் இல்ல மாணவர்களுக்கு, சிறப்புணவு வழங்கப்பட்டது.
அமரர் செல்லத்துரை உடையார் நடேசபிள்ளை அவர்களின் ஆத்மா சாந்தியடைய, எல்லாம் வல்ல, அல்லைப்பிட்டி இனிச்சபுளியடி முருகப் பெருமானை வேண்டி நிற்கின்றோம்.
ஓம் சாந்தி…
ஓம் சாந்தி…
ஓம் சாந்தி…
நிதி அனுசரணை…
அமரர் செல்லத்துரை (உடையார்) நடேசபிள்ளை அவர்களின் குடும்பத்தினர்
அமரர் செல்லத்துரை (உடையார்) நடேசபிள்ளை அவர்கள் இறைவனடி சேர்ந்த,26.09.2019ம் ஆண்டு முதல்,ஒவ்வொரு மாதமும்,26ம் திகதி அன்று சிவா அன்னதான அறக்கட்டளையின் மூலம்,கடந்த இரண்டு வருடங்களாக,தொடர்ந்து அன்னதானம் வழங்கப்பட்டு வருவனை நன்றியோடு தெரிவித்துக் கொள்வதோடு,பெரியவரின் குடும்பத்தினருக்கு,இதயபூர்வமான நன்றியை தெரிவித்து மகிழ்கின்றோம்.












