
ஊரடங்கு நேரத்திலும்,
சிவா அன்னதான அறக்கட்டளையின் ஏற்பாட்டில், மூத்தோர்களுக்கான உலர்உணவுப்பணி…
கனடாவில் காலமான,
அல்லைப்பிட்டியை சேர்ந்த, திரு, திருமதி ஸ்ரனிஸ்லோஸ், திரேசம்மா, தம்பதிகளின் 7ம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு,30.08.2021 திங்கட்கிழமை இன்று
சிவா அன்னதான அறக்கட்டளையின் ஏற்பாட்டில், அல்லைப்பிட்டியில், அரசாங்க முதியோர் உதவி பெறும், தெரிவு செய்யப்பட்ட,54 முதியவர்களுக்கு, அல்லைப்பிட்டியில், அமைந்துள்ள, அமரர்களின் இல்லத்தில் வைத்து, உலர் உணவுப் பொதிகள் வழங்கி வைக்கப்பட்டன.
அமரர்களின் ஆத்மா சாந்தியடைய, எல்லாம் வல்ல,அல்லைப்பிட்டி புனித கார் மேல் அன்னையை வேண்டி நிற்கின்றோம்.
நிதி அனுசரணை…
பிள்ளைகள்
மருமக்கள்
பேரப்பிள்ளைகள்-கனடா













