யாழ்ப்பாணத்தில்                                                                                 அடித்துக்கொலை செய்யப்பட்ட குடும்பஸ்தர்-விபரம்  இணைப்பு!

யாழ்ப்பாணத்தில் அடித்துக்கொலை செய்யப்பட்ட குடும்பஸ்தர்-விபரம் இணைப்பு!

யாழ்ப்பாணம், வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சித்தங்கேணி கலைவாணி வீதி பகுதியில் வசிக்கும் குடும்பஸ்தர் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.

இது தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,

குறித்த நபருக்கும் அவரது அயல் வீட்டுக்காரருக்கும் கடந்த மூன்று மாதங்களாக காணிப் பிரச்சினை இருந்து வந்துள்ளது.

வெளிநாட்டில் உள்ளவருக்குச் சொந்தமான குறித்த வயல் காணியை சகோதரர்கள் இருவர் பராமரித்து வருகின்றனர்.

இன்று (25) காலை குறித்த காணியில் மற்றொருவர் நுழைந்துள்ளதாக அறிந்த சகோதரர்கள் இருவரும் அங்கு சென்றுள்ளனர். இதன்போது குறித்த நபருக்கும் இவர்களுக்கும் இடையில் தர்க்கம் ஏற்பட்டுள்ளது. அது பின்னர் கைகலப்பாக மாறியுள்ளது.

இதன்போது இடம்பெற்ற தாக்குதலில் காயமடைந்த குறித்த குடும்பத்தரும் அவரது மகளும் அயல் வீட்டுக்காரர்களால் சங்கானை பிரதேச வைத்தியசாலைக்கு முச்சக்கர வண்டி மூலம் அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.

பின்னர் தாக்குதலுக்குள்ளானவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளமை பொலிஸாரின் ஆரம்ப விசாரணைகளில் தெரியவந்துள்ளது. மகளுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ள நிலையில் யாழ். போதனா வைத்தியசாலைக்கு மேலதிக சிகிச்சைக்காக அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.

இச்சம்பவத்தில் இராசநாயகம் ரெஜியானந்தன் (49) என்பவரே மரணமடைந்துள்ளார்.

இச்சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை வட்டுக்கோட்டை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

WordPress Appliance - Powered by TurnKey Linux