
அன்னாரின் 31ம் நாள் நினைவு தின நிகழ்வு 23.08.2021 திங்கட்கிழமை அன்று அன்னாரின் இல்லத்தில் நடைபெற்றது.மேலும் அன்னாரின் குடும்பத்தினரின் நிதி அனுசரணையில்,சிவா அன்னாதான அறக்கட்டளையின் ஏற்பாட்டில்,கிளிநொச்சி தருமபுரத்தில் அமைந்துள்ள, நமசிவாய முதியோர் இல்லத்தில் வசிக்கும்,மூத்தோர்களுக்கு மூன்று நேரச்சிறப்புணவும் வழங்கப்பட்டது.
குடும்பத்தினரின் நன்றி நவிலல்…
அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், தொலைநகல், மின்னஞ்சல், RIPBOOK ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்றுவரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.
இங்ஙனம்,குடும்பத்தினர்







