பிரான்ஸில் படுகொலை செய்யப்பட்ட,தாயும்,மகளும்,யாழ் உரும்பிராயை சேர்ந்தவர்களாம்-விபரம் இணைப்பு!

பிரான்ஸில் படுகொலை செய்யப்பட்ட,தாயும்,மகளும்,யாழ் உரும்பிராயை சேர்ந்தவர்களாம்-விபரம் இணைப்பு!

பிரான்ஸில் கொடூரமாக கொல்லப்பட்ட தாய் மற்றும் மகள் யாழ்ப்பாணம் உரும்பிராய் பகுதியை சேர்தவர்கள் என கூறப்படுகின்றது.
பிரான்ஸ் பாரிஸ் புறநகர் பகுதியான வல- துவாஸ் (Val-d’Oise) மாவட்டத்திலுள்ள சான்-உவான் லுமூன் ( Saint-Ouen-l’Aumône) பகுதியில் கடந்த 10.08.2021 அன்று இந்த சம்பவம் இடம்பெற்றிருந்தது.
சம்பவத்தில் 52 வயதான தாய் மற்றும் 21 வயதான மகளுமே சடலங்களாக மீட்பட்டிருந்தனர். இந்நிலையில் குறித்த குடும்பத்தினர் கடந்த இரண்டு வருடங்களாக அங்கு வாழ்ந்து வருவதாகவும் கூறப்பட்டிருந்தது.
எனினும் இந்த கொடூர கொலை சம்பவத்திற்கான காரணம் இதுவரை வெளியாகவில்லை என்பதுடன் மேலதிக விசாரணைகளை பிரான்ஸ் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றதாக கூறப்படுகின்றது.


பழைய செய்தி…
பிரான்ஸ் பாரிஸ் புறநகர் பகுதியான வல- துவாஸ் (Val-d’Oise) மாவட்டத்திலுள்ள சான்-உவான் லுமூன் ( Saint-Ouen-l’Aumône) பகுதியில் தமிழர்களான தாயும் மகளும் சடலங்களாக மீட்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது.
வீடு ஒன்றில் இருந்து 52 வயதான தாய் மற்றும் 21 வயதான மகளுமே இவ்வாறு சடலங்களாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். நேற்று காலை இந்த சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதென பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
இந்நிலையில் சடலங்கள் மீட்கப்பட்ட வீட்டில் மிகவும் அதிர்ச்சியுற்ற நிலையில் காணப்பட்ட இரண்டு ஆண் பிள்ளைகளும் பொலிஸாரால் மருத்துவமனைக்குக்கொண்டு செல்லப்பட்டனர்.
இந்த சம்பவத்தில் உயிரிழந்த இருவர் உட்பட அனைவரும் இலங்கையில் இருந்து புலம்பெயர்ந்து சென்று வசிக்கும் தமிழ் குடும்பத்தினர் என தகவல்கள் வெளியாகியுள்ளன. உயிரிழந்தவர்கள் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டுள்ளதாக ஆரம்பக்கட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
தந்தையார் இரவு வேலைக்கு சென்றிருந்த நிலையில் காலை 10 மணியவில் வீடு திரும்பிய போது தனது மகள் மற்றும் மனைவி உயிரிழந்த நிலையில் கிடப்பதனை அவதானித்து அதிர்ச்சியடைந்துள்ளார்.
உயிரிழந்த இருவரின் தொண்டையிலும் வெட்டு காயங்கள் காணப்பட்டதாகவும், சம்பவம் இடம்பெற்ற இடத்திற்கு அருகில் கத்தி ஒன்றும் மீட்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது. இதனையடுத்து உடனடியாக தந்தை பொலிஸாருக்கு அவசர சிசிக்சை பிரிவினருக்கும் தகவல் வழங்கிய நிலையில் மயங்கமடைந்த நிலையில் இருந்த இரு மகன்களும் வைத்தியசாலைக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளனர்.
குறித்த குடும்பத்தினர் கடந்த இரண்டு வருடங்களாக அங்கு வாழ்ந்து வருவதாகவும் கூறப்படும் நிலையில் இந்த கொடூர கொலை சம்பவத்திற்கான காரணம் இதுவரை வெளியாகவில்லை.
இதேவேளை கடந்த வருடமும் France Noisy-le-Sec நகரில் இலங்கை குடும்பம் ஒன்றில் இடம்பெற்ற குடும்ப வன்முறை காரணமாக ஐவர் உயிரிழந்துள்ள நிலையில், இந்த சம்பவம் புலம்பெயர் தமிழர்களிடையே பெரும் அதிர்ச்சியினை ஏற்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

நன்றி-Jvp நியூஸ்

Leave a Reply

WordPress Appliance - Powered by TurnKey Linux