அல்லைப்பிட்டி பராசக்தி வித்தியாலயத்தில்-கடந்த திங்கட்கிழமை அன்று காலை ஒளிவிழா வெகு சிறப்பாக நடைபெற்றது. பாடசாலையின் அதிபர் கோ.பத்மநாதன் அவர்களின் தலைமையில் விழா நிகழ்வுகள் சிறப்பாக நடைபெற்றதாக எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.மண்டைதீவு,அல்லைப்பிட்டியின் பங்குத்தந்தை எம்.பத்திநாதர் அவர்களினால் சிறப்பு வழிபாடும் இடம்பெற்றதுடன்-மாணர்களுக்கு பரிசுகளும் வழங்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.ஒளிவிழாவில் பெற்றோர்கள் அதிகளவில் கலந்து கொள்ளாதது பெரும் குறையாகவுள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
