அல்லைப்பிட்டி வடக்கு பிரதான வீதியிலிருந்து-பழைய அலுமினியம் தொழிற்சாலைக்கு கிழக்குப் பக்கமாக ஊர்மனைக்குள் ஊர்ந்து செல்லும் வீதியின் தொடக்கத்தில் இணைக்கப்பட்டிருந்த மதகு நீண்ட காலமாக முழுமையாக உடைந்த நிலையில் காணப்படுவதினால் இப்பாதை ஊடாக வாகனங்கள் பயணம் செய்வது முடியாத காரியமாக உள்ளது நீங்கள் அறிந்ததே!
அத்தோடு நீண்டகாலமாக புனரமைக்கப்படாத காரணத்தால் இதனூடாகச் செல்லும் வீதியும் மிக மோசமாக பழுதடைந்துள்ளதும் குறிப்பிடத்தக்கதாகும் . எனவே அல்லையூர் இணையத்தின் ஆதரவுடன்-புலம் பெயர் அல்லைப்பிட்டி மக்களை ஒன்றுசேர்ந்து இந்த வீதியையும்-இடையில் உடைந்து கிடக்கும் மதகையும் திருத்தி இப்பகுதி மக்களின் சீரானபோக்குவரத்துக்கு வளியமைத்துக் கொடுக்க வேண்டும் என்ற உயர்ந்த நோக்கோடு-ஜெர்மனியில் வசிக்கும் திரு தில்லையம்பலம் கண்ணன் ( தனுஜா)அவர்கள் முன் வந்திருந்தார்கள்.
அல்லையூர் இணையத்தின் ஆதரவுடன்-இவர்கள் எடுத்துக்கொண்ட அதீத முயற்சியி்ன் பலனாக தற்போது முதற்கட்டப்பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. சமூக ஆர்வலர் திரு சோமசுந்தரம் மகேஸ்வரநாதன் அவர்களின் மேற்பார்வையில் இத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.தற்போது மாங்குளத்திலிருந்து 9 உருளைகள் கனரக வாகமூலம் அல்லைப்பிட்டிக்கு எடுத்து வரப்பட்டுள்ளது.இன்னும் சில தினங்களில் இவற்றைப் பொருத்தும் பணிகள் ஆரம்பிக்கப்படவுள்ளன.
பல லட்சங்கள் முடியும் இவ்வேலைத்திட்டத்திற்கு இதுவரை உதவிய அந்த நல் உள்ளங்களின் பெயர்கள் கீழே இணைக்கப்பட்டுள்ளன.வேலைகள் முழுமைபெற்றதும் மிகுதி விபரங்கள் அனைத்தும் இத்தளத்தில் பதிவு செய்யப்படும்.
இதுவரை உதவிய நல் உள்ளங்களின் பெயர்கள்
01-திரு செல்லத்துரை தில்லையம்பலம்-ஜெர்மனி
02-தில்லையம்பலம் கண்ணன்-ஜெர்மனி
03-சுதாகரன் சிவரஞ்சினி (கீதா)-ஜெர்மனி
04-மகேந்திரன் மனோன்மணி-ஜெர்மனி
05-மகேந்திரன் மனோகரன்( நாதன்)-பிரான்ஸ்
06-சுப்பிரமணியம் சுதாஜினி (நந்தினி)-பிரான்ஸ்
07-உதயசிங்கம் சுகந்தினி (தேவா)-சுவிஸ்
08-மகேந்திரன் சந்திரகுமார்-பிரான்ஸ்
09-இராசரட்ணம் அருள்ச்சோதி-ஜெர்மனி
10-கணபதிப்பிள்ளை நகுலன்-சுவிஸ்
11-நந்தன் கோமதி-சுவிஸ்
12-ரவிச்சந்திரன் பத்துமாவதி-சுவிஸ்
13-ரவீந்திரன் ராகினி-பிரான்ஸ்
14-ஏகாம்பரம் பாஸ்கரன்-லண்டன்
15-சுந்தரம்பிள்ளை தனேந்திரன் (தனம்)-ஜெர்மனி
16-கணேசமூர்த்தி சந்திரகாசன்-பிரான்ஸ்
17-கணேசமூர்த்தி சந்திரலீலா-பிரான்ஸ்
18-செல்லையா சிவா-பிரான்ஸ்
இனிமேலும் உதவிட முன்வரும் உள்ளங்கள் தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி இலக்கங்கள்