மண்டைதீவைச் சேர்ந்த,மூன்றுபேர் அடுத்தடுத்து வெவ்வேறு இடங்களில் மரணம்-விபரங்கள்  இணைப்பு!

மண்டைதீவைச் சேர்ந்த,மூன்றுபேர் அடுத்தடுத்து வெவ்வேறு இடங்களில் மரணம்-விபரங்கள் இணைப்பு!

யாழ் மண்டைதீவைச் சேர்ந்த, மூவர் வெவ்வேறு இடங்களில் மரணமானதாக தெரியவருகின்றது.அது பற்றிய முழு விபரங்கள் கீழே இணைக்கப்பட்டுள்ளது.

01-மண்டைதீவு 1ம் வட்டாரத்தை பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும்  கொண்ட அருணாசலம் ஜெயகுணதிலகம் அவர்கள் 07.07.2021  அன்று மண்டைதீவில் காலமானார்.

அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 08.07.21 வியாழக்கிழமை அன்று மண்டைதீவில் நடைபெற்றது.

02-மண்டைதீவு 7ம் வட்டாரத்தை பிறப்பிடமாகவும், சுன்னாகம் கந்தரோடையை வதிவிடமாகவும் கொண்ட,அமரர் திருமதி சோதிவேற்பிள்ளை அருந்ததி அவர்கள் 08.07.2021 அன்று காலமானார்.

அன்னார் அல்லைப்பிட்டி கிழக்கைச் சேர்ந்த,அமரர் நல்லையா சோதிவேற்பிள்ளை அவர்களின்அன்பு மனைவியாவார். என்பதோடு மாவீரர் ஒருவரின் தாயுமாவார்.

அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 09.07.2021 வெள்ளிக்கிழமை அன்று கந்தரோடையில் நடைபெற்றது.

03-மண்டைதீவு 7ம் வட்டாரத்தைச் சேர்ந்த,திரு விநாயகமூர்த்தி சித்திவிநாயகம் அவர்களின் புதல்வியும்,பல்கலைக்கழக மாணவியுமான, யதார்த்தினி சித்திவிநாயகம் அவர்கள் 08.07.2021அன்று சுகயீனம் காரணமாக மன்னாரில் காலமானார்.

அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 09.07.2021 வெள்ளிக்கிழமை அன்று மன்னாரில் நடைபெற்றது.

அடுத்தடுத்து காலமான மூன்றுபேரின் ஆத்மாக்கள் சாந்தியடைய,எல்லாம் வல்ல இறையருளை வேண்டி நிற்கின்றோம்.

ஓம் சாந்தி…

Leave a Reply

WordPress Appliance - Powered by TurnKey Linux