சிவா அன்னதான அறக்கட்டளையின் ஏற்பாட்டில்,வாழ்வாதார உதவி வழங்கி வைப்பு-விபரங்கள் படங்கள் இணைப்பு!

சிவா அன்னதான அறக்கட்டளையின் ஏற்பாட்டில்,வாழ்வாதார உதவி வழங்கி வைப்பு-விபரங்கள் படங்கள் இணைப்பு!

லண்டனில் வசிக்கும், வர்த்தகப் பெருமகன் ஒருவருடைய, திருமண நாளை முன்னிட்டு,சிவா அன்னதான அறக்கட்டளையின் ஏற்பாட்டில்,கணவனை இழந்து, மூன்று பிள்ளைகளுடன் செய்வதறியாது கலங்கி நின்ற,ஒரு சகோதரியின் வாழ்வாதாரத்திற்கு உதவிடும் நோக்கோடு,
வாழ்வாதாரப்பணி ஒன்று முன்னெடுக்கப்பட்டது.

இப்பணியானது கடந்த (22.06.2021) செவ்வாய்க்கிழமை அன்று முன்னெடுக்கப்பட்டதுடன் , அன்றைய தினம் தமது திருமண நாளை முன்னிட்டு, இப்பணிக்கு நிதி வழங்கிய தம்பதிகளுக்கு,இறையாசி வேண்டி,இனிய திருமண நாள் நல் வாழ்த்துக்களையும், தெரிவித்து மகிழ்கின்றோம்.

இப்பயனாளியை தெரிவு செய்து,இப்பணியினை சிறப்பாக செய்து முடித்த, தாய்த் தமிழ் பேரவையின் ஸ்தாபகர் திரு ச.ரூபன் அவர்களுக்கும்,எமது நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.

மேலதிக விபரங்கள்…

பயனாளியின் பெயர்…
திருமதி ஜோன் லோகராணி
9ஆம் யூனிற் பாவற்குளம், செட்டிக்குளம்- வவுனியா

மூன்று பிள்ளைகள், இரண்டு பெண் பிள்ளைகள், ஒரு ஆண் மகன்…
பிள்ளைகளின் பெயர்…

01-சலோமிக்கா ஜெஸ்மின் 0/L

02-சர்மிகா ஜெஸ்மின் 7ஆம் ஆண்டு

03-யூட் தருன் 4வயது

குடும்பத்தலைவர்…
திரு அந்தோனிராசா.ஜோன் இவர் மரணமடைந்து 23 நாட்கள் கடந்த நிலை…

வாழ்வாதார உதவி பற்றிய விபரம்…
பால்மாடு,கன்றுடன் நாள் ஒன்றிற்கு 4லீற்றர் பால் கறக்கக்கூடியது .
இக்குடும்பத்திற்கு 5000 ரூபா பெறுமதியுடைய உலர் உணவுப் பொருட்களும் வழங்கி வைக்கப்பட்டன.

மேலும், இக்கிராமத்தில் அமைந்துள்ள தோட்டத்திங்களில் கூலி வேலை செய்து கொண்டிருந்த,5 பெண் தலைமைத்துவக் குடும்பங்களுக்கு 1200 ரூபா படி 6000 ரூபா பெறுமதியுடைய உலர் உணவு பொருட்களும் வழங்கி வைக்கப்பட்டன.

Leave a Reply

WordPress Appliance - Powered by TurnKey Linux