யாழ் மண்டைதீவு பூமாவடி பூம்புகார் அருள்மிகு ஸ்ரீ கண்ணகை அம்மன் ஆலய வருடாந்த திருவிழா பற்றிய அறிவித்தல் இணைப்பு!

யாழ் மண்டைதீவு பூமாவடி பூம்புகார் அருள்மிகு ஸ்ரீ கண்ணகை அம்மன் ஆலய வருடாந்த திருவிழா பற்றிய அறிவித்தல் இணைப்பு!

அம்பிகை மெய்யடியார்களே!

நாட்டிலே நிலவுகின்ற அசாதாரண சூழ்நிலை காரணமாக இவ் வருட பொங்கல் திருவிழாவினை 05 பேருடன் மட்டுமே நடாத்தப்பட வேண்டும் என்ற சுகாதாரதுறையினரின் அறிவுறுத்தலுக்கு அமைவாக

25-06-2021 வெள்ளிக்கிழமை :- ஊர்வலத் திருவிழா
28-06-2021 திங்கட்கிழமை :- பொங்கல் திருவிழா

ஆகிய தினங்களில் வருகின்ற திருவிழாவினை இறுக்கமான சுகாதார கட்டுப்பாட்டு விதிமுறைகளுக்கு அமைவாக மட்டுப்படுத்தப்பட்ட நிகழ்வுகளுடன் ஆலயத்தினுள் நடாத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது என்பதனை அறியத்தருகின்றோம். எனவே அதிகரித்துவரும் நோய்ப்பரம்பலின் தீவிரத்தன்மையினை மனதிற்கொண்டு ஆலயத்திற்கு வருகைதருவதை தவிர்த்து இல்லங்களில் இருந்து கொடிய நோயானது நீங்கவேண்டும் என்றும் அனைத்து மக்களும் சுகத்துடன் இன்புற்று வாழ வேண்டும் என்றும் அம்பிகையை வழிபாடு செய்யுமாறு வேண்டிக்கொள்கின்றோம்.

நன்றி
மண்டைதீவு பூமாவடி பூம்புகார்
அருள்மிகு ஸ்ரீ கண்ணகை அம்மன் ஆலய
பரிபாலன சபை

Leave a Reply

WordPress Appliance - Powered by TurnKey Linux