சிவா அன்னதானஅறக்கட்டளையின் ஏற்பாட்டில்,கிளிநொச்சி புதுக்காடு கிராம  மக்களுக்கு உலர் உணவுப்பொருட்கள் வழங்கி வைப்பு-விபரங்கள் இணைப்பு!

சிவா அன்னதானஅறக்கட்டளையின் ஏற்பாட்டில்,கிளிநொச்சி புதுக்காடு கிராம மக்களுக்கு உலர் உணவுப்பொருட்கள் வழங்கி வைப்பு-விபரங்கள் இணைப்பு!

சிவா அன்னதான அறக்கட்டளையின் ஏற்பாட்டில், கொழும்பில் வசிக்கும்,மண்கும்பானைச் சேர்ந்த, செல்வன் சந்திரன் அனிஷன் அவர்களின் 10வது பிறந்த நாளை முன்னிட்டு, நமசிவாய பவுண்டேசன் ஊடாக,18.06.2021 வெள்ளிக்கிழமை அன்று, கிளிநொச்சி மாவட்டத்தில் மிகவும் பின் தங்கிய,புதுக்காடு கிராமத்தில் வசிக்கும்,30 குடும்பங்களுக்கு உலர் உணவுப் பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டன.
இப்பணிக்கு நிதி வழங்கிய,திரு தி.சந்திரன் அவர்களுக்கு நன்றியைத் தெரிவிப்பதோடு,18.06.2021 அன்று பிறந்த நாளை கொண்டாடிய, செல்வன் சந்திரன் அனிஷனுக்கு, மண்கும்பான் வெள்ளைப் புற்றடி வீரகத்தி விநாயகப் பெருமானின் அருளாசி வேண்டி, பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்து மகிழ்கின்றோம்.

Leave a Reply

WordPress Appliance - Powered by TurnKey Linux