அல்லைப்பிட்டி றோமன் கத்தோலிக்க வித்தியாலயத்தின் பரிசளிப்பு விழாவும்-ஒளிவிழாவும்-04-12-2013 புதன்கிழமை அன்று பிற்பகல் 2மணிக்கு பாடசாலை -அதிபர் திரு வி.என் பத்மநாதன் அவர்கள் தலைமையில் மிகச்சிறப்பாக நடைபெற்றது. இவ்விழாவிற்கு பிரதம விருந்தினராக-கோப்பாய் ஆசிரியர் பயிற்சி கலாசாலையின் அதிபர் திரு வே.கா.கணபதிப்பிள்ளை அவர்கள் வருகைதந்து சிறப்பித்தார்.விழாவில் மாணவர்களின் கலை நிகழ்சிகள் இடம் பெற்றதுடன்-வருகை தந்த பிரதம விருந்தினர்-மற்றும் சிறப்பு விருந்தினர்களினால் மாணவர்களுக்கு பரிசுகளும் வழங்கப்பட்டன.
