
மண்கும்பான் மேற்கைச் சேர்ந்த, அமரர் திருமதி யோகேஸ்வரன் சுபாஜினி அவர்களின் 1ம் ஆண்டுத் திதியை முன்னிட்டு, அன்னாரின் குடும்பத்தினரின் நிதி அனுசரணையில்,சிவா அன்னதான அறக்கட்டளையின் ஏற்பாட்டில்,(11.06.2021) வெள்ளிக்கிழமை அன்று மண்கும்பானில், முன்னுரிமை அடிப்படையில்,தெரிவு செய்யப்பட்ட,முதியோர்கள் மற்றும் பெண் தலைமைத்துவக் குடும்பங்கள் உள்ளடங்கலாக,62 குடும்பங்களுக்கு உலர் உணவுப் பொதிகள் வழங்கி வைக்கப்பட்டன.
இப்பணிக்கு நிதி வழங்கிய,திரு யோகேஸ்வரன்அவர்களுக்கு மனமார்ந்த நன்றியினைத் தெரிவிப்பதோடு,அமரர் திருமதி யோகேஸ்வரன் சுபாஜினி அவர்களின் ஆத்மா சாந்தியடைய,எல்லாம் வல்ல மண்கும்பான் வெள்ளைப்புற்றடி வீரகத்தி விநாயகப்பெருமானை வேண்டி நிற்கின்றோம்.
இப்பணியினை,
மண்கும்பானின் மைந்தனும்,சமூக ஆர்வலரும்,வேலணை பிரதேச சபையின் மண்கும்பானுக்கான உறுப்பினருமான,திரு செல்லப்பா பார்த்தீபன் அவர்கள் முன்னெடுத்திருந்தார்.
அவருக்கு எமது நன்றியினைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
















