யாழ் மண்டைதீவு கடலில் படுகொலை செய்யப்பட் 31 மீனவர்களின் 35வது ஆண்டு  நினைவு தினம் இன்றாகும்-பதிவு இணைப்பு!

யாழ் மண்டைதீவு கடலில் படுகொலை செய்யப்பட் 31 மீனவர்களின் 35வது ஆண்டு நினைவு தினம் இன்றாகும்-பதிவு இணைப்பு!

நெஞ்சம் மறக்குமா?
யாழ் மண்டைதீவுக் கடலில் படுகொலை செய்யப்பட்ட-31அப்பாவி குருநகர் மீனவர்களின் 35 வது ஆண்டு நினைவு தினம்(10.06.2021) இன்றாகும்.
உங்கள் ஆத்மா சாந்தியடைய ஆண்டவரை வேண்டி நிற்கின்றோம்.
10.06.1986 அன்று நடந்தது என்ன???
குருநகர் மக்கள் தம்வாழ்வோடு ஒன்றித்த கடல்தொழில் சார்ந்த உழைப்பின் வீரமரபோடு தொழில் ஈடுபாடு கொண்டவர்கள்.
பல இடங்களில் இத்தகைய வீரமிக்க ஆதிபத்திய கரைவலைத் தொழில் அரிதாகிகவிட்டது! குருநகர் மீனவர்கள் இன்றுவரை இத்தொழிலை மேற்கொண்டு வருபவர்கள் 1986ம் ஆண்டு ஆனிமாதம் 10ம் திகதி குருநகர் துறைமுகம் வெள்ளிகளின் மினு மினுப்பு மறையாத நேரம் கல கலப்பாக் காணப்பட்டது..!
‘தூய ஒளி படகு’ 31மீனவர்கனை சுமந்தபடி அதிகாலைவேளை புறப்பட்டது. படகில் இருந்த மண்டாடிமா உரத்த குரலில் இன்றைய நிலவரம் மண்டை தீவு பாட்டிற்கு ஏற்றதாக இருப்பதால் அங்கோடி வலை வைப்போம் என்ற போது. பெரிய ஜெற்றி தாண்டவும் யாகப்பர் ஆலயத் திருந்தாதி மணி அடித்தது.
அந்த ஓசை அவர்களது இதயஒளி படகு சற்றுத்தூரம் சென்றதும், பாசையூர் அந்தோனியார் கோவில் கோபுரம் படகைத் திருப்பி அணியத்தைப் பார்க்க விட்டு கைகூப்பி வணங்கினார்கள்.. முகத்துவாரம் வெளிச்சக் கூடு தாண்டி மண்டைதீவுக் கடலில் இறங்கினார்கள். 27 பேர் கரையிறங்க நால்வர் படகில் நின்றனர்! வலை வளைக்க ஆயத்தமாக, தொழிலுக்குச் சென்றவரன்றி சண்டைக்குச் சென்றவரல்ல! கடலோடு காற்றோடு போராடி சீவியம் நடத்தப் போராடச் சென்றவர்கள்.
விடியலின் பூபாளம் தென்னை பனையின் ஆர்ப்பரிப்பு ஆனந்தமாக இசைபாடும் நேரம் எங்கிருந்து இந்த இனவெறியர்! முக மூடியனிந்தபடி! சிங்களக் கடற்படையினரின் சிறியகப்பல்… பலவிதமான ஆயுதங்களும் பொருத்தபட்டிருந்தது! மீனவர்கள் அனைவரையும் கைகட்டித் தலை குனிந்து நாரி முட்டக் கடலில் நிற்கும்படி உறுமினார்கள். பின்பு கோடரி வாள் கத்தி பொல்லால் துவக்கால் கொடிய வதை புரிந்து 31 கடல் மீனவர்களையும் வீழ்த்தினார்கள்!
மண்டைதீவு நீலக்கடல் எங்கும் பிணம் மிதந்து சிவப்பாய்ச் சுடர்ந்தது மீன்களை ஐஸ் பெட்டிக்குள் அடுக்கினால் போல் கவரிமான்களை குருநகர் சன சமூக நிலையத்து விறாந்தையில் குவித்தனர்! அக்காட்சியை ஒப்பிட வார்த்தையே இல்லை!
இவர்களுக்காக விழிநீர் சிந்துபவர்கள் குருநகரில் குவிந்து கிடக்கிறார்கள். படு கொலைக்கான நியாயம் இன்றுவரை கிடைக்க வில்லை -அது கிடைக்கப்போவதுமில்லை.
அக்கினிக்கவிஞர் மா.கி.கிறிஸ்ரியன்

Leave a Reply

WordPress Appliance - Powered by TurnKey Linux