தீவகத்தில் முதல் முதலில் அமைக்கப்பட்டுள்ள உல்லாசவிடுதி ஒன்று அல்லைப்பிட்டியில் அமைந்துள்ளது.அல்லைப்பிட்டி இந்து மயானத்திற்கு மிக அருகிலும்-அல்லைப்பிட்டி தெற்கு கடற்கரையோரமாகவும் அமைக்கப்பட்டுள்ள இந்த உல்லாச விடுதியின் உத்தியோகபூர்வமான திறப்பு விழா-வரும் புதுவருடத்தன்று நடைபெறவுள்ளதாக விடுதி நிர்வாகம் அறிவித்துள்ளது.
மிகப் பிரமாண்டமாக நடைபெறவுள்ள இத்திறப்புவிழாவில் கலந்து கொள்ள விரும்பினால் 2000 ரூபாக்கள் செலுத்தி நுழைவுக்கட்டணத்தைப் பெற்றுக் கொள்ளுமாறு விளம்பரம் செய்யப்படுகின்றது.
அல்லைப்பிட்டியில் மிகப்பிரமாண்டமாக அமைக்கப்பட்டுள்ள இந்த உல்லாச விடுதியினால் எதிர்காலத்தில் இக்கிராமமக்களுக்கு என்னபயன் என்பதனை பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.