சிவா அன்னதான அறக்கட்டளையின் ஊடாக,மன்னாரில் உலர் உணவுப்பொருட்கள் வழங்கி வைப்பு!

சிவா அன்னதான அறக்கட்டளையின் ஊடாக,மன்னாரில் உலர் உணவுப்பொருட்கள் வழங்கி வைப்பு!

சிவா அன்னதான அறக்கட்டளையின் ஏற்பாட்டில்,மன்னார் மாவட்டத்தில் அமைந்துள்ள மிகவும் பின்தங்கிய நலிவுற்ற மக்களுக்கு,கடந்த 29.05-,30,05,ஆகிய இரு திகதிகளிலும்,80 ஆயிரம் ரூபாய் பெறுமதியான உலர் உணவுப் பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டன.

விபரங்கள் கீழே இணைக்கப்பட்டுள்ளது.

01-கனடாவில் காலமான, தீவகம் எழுவைதீவைச் சேர்ந்த,அமரர் ஜயம்பிள்ளை கனகசபை அவர்களின் 2ம் ஆண்டுத் திதியை முன்னிட்டு, அன்னாரின் குடும்பத்தினரின் நிதி அனுசரணையில்,சிவா அன்னதான அறக்கட்டளையின் ஏற்பாட்டில்,29.05.2021 சனிக்கிழமை அன்று, மன்னார் மாவட்டத்தில் அமைந்துள்ள, கீரிசுட்டான், முள்ளிக்குளம்,ஆகிய இரு கிராமங்களில் வசிக்கும், பெண் தலைமைத்துவக் குடும்பங்கள் மற்றும் வயோதிபர்கள் உள்ளடங்கலாக,23 குடும்பங்களுக்கு, உலர் உணவுப் பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டன.

02-சிவா அன்னதான அறக்கட்டளையின் ஏற்பாட்டில், பிரான்ஸில் வசிக்கும்,மண்கும்பானைச் சேர்ந்த, சகோதரி ஒருவரின் நிதி அனுசரணையில், மன்னார் மாவட்டத்தின்,மடு பிரதேசத்தில் அமைந்துள்ள, முள்ளிக்குளம், வலது கரை, மற்றும் மண்கிண்டி, ஆகிய கிராமங்களில், தெரிவுசெய்யப்பட்ட, வயோதிபர்கள் மற்றும் பெண் தலைமைத்துவக்குடும்பங்கள் என 22 குடும்பங்களுக்கு, உலர் உணவுப்பொருட்கள் 30.05.2021 அன்றைய தினம் வழங்கி வைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கதாகும்.

Leave a Reply

WordPress Appliance - Powered by TurnKey Linux