யாழ் பல்கலைக்கழக,ஆங்கில விரிவுரையாளர் திருமதி ஸ்ரீரஞ்சினி ஆனந்தகுமாரசாமி அவர்கள்  கொரோனா தொற்றால் உயிரிழப்பு-படங்கள் இணைப்பு!

யாழ் பல்கலைக்கழக,ஆங்கில விரிவுரையாளர் திருமதி ஸ்ரீரஞ்சினி ஆனந்தகுமாரசாமி அவர்கள் கொரோனா தொற்றால் உயிரிழப்பு-படங்கள் இணைப்பு!

யாழ்.பல்கலைக்கழக பெண் விரிவுரையாளர் ஒருவர் கொரோனா தொற்றுக்குள்ளான நிலையில் உயிரிழந்துள்ளார். 
யாழ்ப்பாணம், அரியாலை பகுதியைச் சேர்ந்த , யாழ். பல்கலைக்கழக ஆங்கில விரிவுரையாளரான திருமதி ஸ்ரீரஞ்சினி ஆனந்தகுமாரசாமி என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். 

தனியார் நிறுவனத்தில் பணிபுரியும் விரிவுரையாளரின் குடும்ப உறுப்பினர் ஒருவருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்ட நிலையில் , விரிவுரையாளருக்கு மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர். பரிசோதனையின் போது அவருக்கு தொற்று உறுதியானது. 

அதனை அடுத்து யாழ். போதனா வைத்தியசாலை தனிமைப்படுத்தல் விடுதியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று (28) வெள்ளிக்கிழமை இரவு சிகிச்சை பயனின்றி உயிரிழந்துள்ளார். 

விரிவுரையாளரின் சடலம் கொரோனா சுகாதார விதிமுறைகளின் படி -இன்று சனிக்கிழமை கோம்பயன் மணல் மயானத்தில் மின் தகனம் செய்யப்பட்டது.

Leave a Reply

WordPress Appliance - Powered by TurnKey Linux