
அல்லையூர் அறப்பணி குடும்பத்தின் பதிவு செய்யப்பட்ட-அறக்கட்டளையாக,சிவா அன்னதான அறக்கட்டளை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
சிவா அன்னதான அறக்கட்டளையின்,முதலாவது உலர்உணவுப்பொருட்கள் வழங்கிய நிகழ்வானது,கடந்த 25.05.2021 செவ்வாய்கிழமை அன்று ஆரம்பித்து வைக்கப்பட்டதுடன்-அன்றைய தினம்,கனடாவில் வசிக்கும்,திருமதி தயா பாலன் அவர்களின் நிதி அனுசரணையில்,
ஒரு லட்சத்து இருபதாயிரம் ரூபாய் பெறுமதியான உலர் உணவுப் பொருட்கள், திருகோணமலை, முல்லைத்தீவு, கிளிநொச்சி,ஆகிய மாவட்டங்களில் தெரிவு செய்யப்பட்ட, நலிவுற்ற மக்களுக்கு, வழங்கி வைக்கப்பட்டன.
புலம்பெயர் மக்களின் பேராதரவோடு,சிவா அன்னதான அறக்கட்டளையின் பணிகள்தொடர்ந்து முன்னெடுக்கப்படவுள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.
உண்மை..
நேர்மை…
கருணை…இதுவே சிவா அன்னதான அறக்கட்டளையின் உயர்ந்த நோக்கமாகும்.
ஆயிரத்து ஜந்நூறு (1500) தடவைகளை நெருங்கும் அன்னதானப்பணி…
புலம் பெயர் மக்களின் பேராதரவில்,அல்லையூர் அறப்பணி குடும்பத்தின் ஊடாக,முன்னெடுக்கப்பட்டு வரும்,அன்னதானப்பணியானது 1480 தடவைகளை கடந்து தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருவதும் குறிப்பிடத்தக்கதாகும்.












