
குழந்தைகள் மூவரும் உயிரிழந்த நிலையில், மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த சம்பவம் வட்டக்கச்சி ஒற்றைக்கை பிள்ளையார் கோவிலடி என்ற பகுதியில் இடம்பெற்றிருப்பதாக தெரியவருகிறது. இதன்போது எட்டு வயது, ஐந்து வயது, இரண்டு வயது உடைய ஒரு ஆண் பிள்ளையும் இரண்டு பெண் பிள்ளைகளே இவ்வாறு உயிரிழந்திருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
கணவருடன் ஏற்பட்ட முரண்பாடு காரணமாகவே குறித்த சம்பவம் இடம்பெற்றதாக முதற்கட்டத் தகவல் தெரிவிக்கின்ற போதிலும் மீட்கப்பட்ட பெண் பதில் ஏதும் கூற மறுப்பதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
சம்பவம் தொடர்பில் தர்மபுரம் பொலிசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். குறித்த சிறுவர்கள் அணிந்து சென்ற பாதணிகள் மற்றும் தொப்பி என்பன கிணற்றுக்கு அருகில் காணப்படுகின்றன.

