திரு பேரம்பலம் சின்னத்தம்பி அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு,உலர் உணவுப்பொருட்கள் வழங்கிய நிகழ்வு-வீடியோ இணைப்பு!

திரு பேரம்பலம் சின்னத்தம்பி அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு,உலர் உணவுப்பொருட்கள் வழங்கிய நிகழ்வு-வீடியோ இணைப்பு!

பிரான்ஸில் வசிக்கும்,மண்கும்பானைச் சேர்ந்த,சமூகஆர்வலர் திரு பேரம்பலம் சின்னத்தம்பி (குட்டி)அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு,02.03.2021செவ்வாய்க்கிழமை அன்று அல்லையூர் அறப்பணியின் மூத்தோர் நலன் காக்கும்
திட்டத்தின் மூலம் மண்கும்பான் கிராமத்தில் தெரிவு செய்யப்பட்ட 33 பயனாளிகளுக்கு உலர் உணவுப்பொதிகள் வழங்கி வைக்கப்பட்டன.

இந்நிகழ்வு மண்கும்பான் முருகன் கோவிலில் அமைந்துள்ள,அமரர் திருமதி லீலாவதி சின்னத்தம்பி மணிமண்டபத்தில்,சமூக ஆர்வலரும்,வேலணை பிரதேசசபையின் மண்கும்பானுக்கான உறுப்பினருமான,திருசெல்லப்பா பார்த்தீபன் அவர்களின் தலைமையிலும்,ஒழுங்கமைப்பிலும்,முன்னெடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கதாகும்.

Leave a Reply

WordPress Appliance - Powered by TurnKey Linux