அல்லையூர் அறப்பணியின் “மூத்தோர் நலன் காக்கும் திட்டம்”மண்கும்பானிலிருந்து ஆரம்பம்-விபரங்கள் வீடியோ இணைப்பு!

அல்லையூர் அறப்பணியின் “மூத்தோர் நலன் காக்கும் திட்டம்”மண்கும்பானிலிருந்து ஆரம்பம்-விபரங்கள் வீடியோ இணைப்பு!

பிரான்ஸில் வசிக்கும்,
செல்வி சசிகுமார் சாருகா அவர்களின் 10வது பிறந்த நாளை முன்னிட்டு,13.02.2021 சனிக்கிழமை அன்று
அல்லையூர் அறப்பணியின் மூத்தோர் நலன் காக்கும் திட்டத்தின் ஊடாக,
மண்கும்பானில் தெரிவு செய்யப்பட்ட 25 பயனாளிகளுக்கு புத்தாடைகள் வழங்கி வைக்கப்பட்டன.
மேலும் மூத்தோர்களுக்கு,சிற்றுண்டி வழங்கப்பட்டதுடன்,மூத்தோர்களினால்,செல்வி சாருகாவிற்கு பிறந்த நாள் வாழ்த்தும், ஆசீர்வாதமும் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கதாகும்.
செல்வி சசிகுமார் சாருகாவிற்கு இறையாசி வேண்டி, இனிய பிறந்த நாள் நல் வாழ்த்துக்களை நாமும் தெரிவித்து மகிழ்கின்றோம்.

அல்லையூர் அறப்பணியின் அன்னதானப்பணி 1300 வது தடவைகளை கடந்து தினமும் முன்னெடுக்கப்பட்டு வருவதுடன் மேலும் கடந்த 13.01.2021 அன்று அல்லையூர் அறப்பணியின் “மூத்தோர் நலன் காக்கும் திட்டம்” மண்கும்பான் கிராமத்திலிருந்து ஆரம்பிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.இத்திட்டத்தின் மூலம் மண்கும்பானில் தெரிவுசெய்யப்பட்ட25 பயனாளிகளுக்கு நான்காம் கட்டமாக புது ஆடைகள் வழங்கிவைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கதாகும்.

01. லண்டனில் வசிக்கும்,திரு ஏரம்பமூர்த்தி ஜெகதீஸ்வரன் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு,13.01.2021 அன்று உலர்உணவுப் பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டன.

02-பிரான்ஸில் வசிக்கும்,திரு எஸ்.இராஜலிங்கம்(எஸ்.ஆர்) அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு,பயனாளிகளுக்கு நுளம்பு வலைகள் வழங்கி வைக்கப்பட்டன.

03-பிரான்ஸில் காலமான,திருமதி பிறேமராணி விஜேந்திரன் அவர்களின் 31ம் நாள் நினைவுதினத்தை முன்னிட்டு,தெரிவு செய்யப்பட்ட மூத்தோர்களுக்கு சிறப்புணவு வழங்கியதுடன்-மேலும் 25 பயனாளிகளுக்கும்,உலர்உணவுப்பொருட்களும் வழங்கி வைக்கப்பட்டன.

04-பிரான்ஸில் வசிக்கும்,செல்வி செல்வி சசிகுமார் சாருகா அவர்களின் 10வது பிறந்த நாளை முன்னிட்டு,13.02.2021 சனிக்கிழமை அன்று 25 பயனாளிகளுக்கு புது ஆடைகள் வழங்கி வைக்கப்பட்டன.

Leave a Reply

WordPress Appliance - Powered by TurnKey Linux