சுவிசில் வசிக்கும்-அல்லைப்பிட்டியைச் சேர்ந்த,திரு திருமதி இராஜலிங்கம் அம்பிகா தம்பதியினரால் நடத்தப்பட்டு வரும் கண்ணகி கல்வி நிலையத்தின் 16வது ஆண்டு விழா 23-11-2013 சனிக்கிழமை அன்று சூரிச்சில் அமைந்துள்ள மண்டபத்தில் வெகு சிறப்பாக நடைபெற்றது.இவ்விழாவில் கண்ணகி கல்வி நிலைய மாணவர்களின் கலைநிகழ்வுகள் சிறப்பாக நடைபெற்றதுடன்-மாணவர்களுக்கு பரிசுகளும் வழங்கப்பட்டன.
ஒவ்வொரு வருடமும் கண்ணகி கல்வி நிலையத்தின் ஆண்டுவிழா வெகு சிறப்பாக நடைபெற்று வருவதும் குறிப்பிடத்தக்கதாகும்.இவ்விழாவின் போது சேரும் நிதியினை-தாயகத்தில் யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அனுப்பிவருவதும் குறிப்பிடத்தக்கதாகும்.