அமரர் திருமதி பிறேமராணி விஜேந்திரன் அவர்களின் 31ம் நாளை முன்னிட்டு நடைபெற்ற அறப்பணி நிகழ்வுகளின் வீடியோ,நிழற்படங்கள் இணைப்பு!

அமரர் திருமதி பிறேமராணி விஜேந்திரன் அவர்களின் 31ம் நாளை முன்னிட்டு நடைபெற்ற அறப்பணி நிகழ்வுகளின் வீடியோ,நிழற்படங்கள் இணைப்பு!

பிரான்ஸில் காலமான,மண்கும்பானைச் சேர்ந்த,திருமதி பிறேமராணி விஜேந்திரன் அவர்களின் 31ம்நாள் நினைவுதினத்தை முன்னிட்டு,அன்னாரின் குடும்பத்தினரின் நிதி அனுசரணையில்,அல்லையூர் அறப்பணி குடும்பத்தினரின் ஏற்பாட்டில்,பல்வேறு இடங்களில் அறப்பணி நிகழ்வுகள் முன்னெடுக்கப்பட்டன.

அவை பற்றிய விபரங்கள் கீழே இணைக்கப்பட்டுள்ளன.

01-மண்கும்பான் முருகன் கோவிலில் அமைந்துள்ள திருமதி லீலாவதி சின்னத்தம்பி மணிமண்டபத்தில் நடைபெற்ற சிறப்பு நிகழ்வு-வீடியோ இணைப்பு

02-வவுனியா சிவன் முதியோர் இல்லத்தில் வசிக்கும் முதியவர்களுக்கு சிறப்புணவு வழங்கப்பட்டது.பிரான்ஸில் காலமான,மண்கும்பானைச் சேர்ந்த, அமரர் திருமதி பிறேமராணி விஜேந்திரன் அவர்களின் 31ம் நாள் நினைவு தினத்தை முன்னிட்டு,06.02.2021 சனிக்கிழமைஇன்று அல்லையூர் அறப்பணி குடும்பத்தினரின் ஏற்பாட்டில், வவுனியா சிவன் முதியோர் இல்லத்தில் வசிக்கும், முதியவர்களுக்கு மதியச் சிறப்புணவு வழங்கப்பட்டது.அமரர் திருமதி பிறேமராணி விஜேந்திரன் அவர்களின் ஆத்மா சாந்தியடைய, எல்லாம் வல்ல, மண்கும்பான் வெள்ளைப்புற்றடி வீரகத்தி விநாயகப் பெருமானை வேண்டி நிற்கின்றோம்.ஓம் சாந்தி…

03-பிரான்ஸில் காலமான,மண்கும்பானைச் சேர்ந்த, அமரர் திருமதி பிறேமராணி விஜேந்திரன் அவர்களின் 31ம் நாள் நினைவு தினத்தை முன்னிட்டு,06.02.2021 சனிக்கிழமை இன்று, அல்லையூர் அறப்பணி குடும்பத்தினரின் ஏற்பாட்டில், நமச்சிவாய பவுண்டேசன் ஊடாக, கிளிநொச்சியில் வசிக்கும், இரண்டு குழந்தைகளைக் கொண்ட, வலுவிழந்த முன்னாள் பெண் போராளியின் குடும்பத்திற்கும், மேலும் கணவனை இழந்து, இரண்டு குழந்தைகளுடன், கஸ்ரப்படும், திருமதி தமிழினி அவர்களின் குடும்பத்திற்கும்,என மொத்தம் 25 ஆயிரம் ரூபாய் பெறுமதியான உலர் உணவுப் பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டன.இப்பணிக்கு நிதி வழங்கிய, அமரர் திருமதி பிறேமராணி விஜேந்திரன் அவர்களின் குடும்பத்தினருக்கு நன்றியினைத் தெரிவித்து மகிழ்கின்றோம்.திருமதி பிறேமராணி விஜேந்திரன் அவர்களின் ஆத்மா சாந்தியடைய, எல்லாம் வல்ல இறையருளை வேண்டி நிற்கின்றோம்.ஓம் சாந்தி…

04-பிரான்ஸில் காலமான,மண்கும்பானைச் சேர்ந்த, அமரர் திருமதி பிறேமராணி விஜேந்திரன் அவர்களின் 31ம் நாள் நினைவு தினத்தை முன்னிட்டு,06.02.2021 சனிக்கிழமை இன்று, அல்லையூர் அறப்பணி குடும்பத்தினரின் ஏற்பாட்டில்,திருகோணமலை பெரியகுளம் பகுதியில் வசிக்கும், மனநலம் குன்றிய மகனை பராமரித்து வரும், திருமதி கிறிஸ்தோப்பர் அவர்களின் குடும்பத்திற்கும், மேலும் வலுவிழந்த நான்கு குடும்பங்களுக்கும், உலர் உணவுப் பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டதுடன் மேலும் ஒரு தாயாரின் வேண்டுதலின் பேரில் பால்மா ரின்னும், அத்துடன் நோயுற்ற ஒருவருக்கு, உயிர் காக்கும், மருந்து வாங்குவதற்காக,சிறு தொகை பணமும் வழங்கி வைக்கப்பட்டன.இப்பணிக்கு நிதி வழங்கிய, அமரர் திருமதி பிறேமராணி விஜேந்திரன் அவர்களின் குடும்பத்தினருக்கு நன்றியினைத் தெரிவித்து மகிழ்கின்றோம்.திருமதி பிறேமராணி விஜேந்திரன் அவர்களின் ஆத்மா சாந்தியடைய, எல்லாம் வல்ல இறையருளை வேண்டி நிற்கின்றோம்.ஓம் சாந்தி…

Leave a Reply