அல்லைப்பிட்டியில் அதிககாலம் வாழ்ந்த,திருமதி சங்கரப்பிள்ளை பூரணம் ஆச்சி காலமானார்-விபரங்கள் இணைப்பு!

அல்லைப்பிட்டியில் அதிககாலம் வாழ்ந்த,திருமதி சங்கரப்பிள்ளை பூரணம் ஆச்சி காலமானார்-விபரங்கள் இணைப்பு!

அல்லைப்பிட்டிக் கிராமத்தில் அதிக காலம் வாழ்ந்தவர்களில் ஒருவரான அல்லைப்பிட்டி 3ஆம் வட்டாரத்தைச் சேர்ந்த ‘சங்கரப்பிள்ளை ஆச்சி’ என எல்லோராலும் அன்பாக அழைக்கப்பட்ட திருமதி. சங்கரப்பிள்ளை பூரணம் அவர்கள் கடந்த(06.01.2021) புதன்கிழமை அன்று தனது 90ஆவது வயதில் அல்லைப்பிட்டியில் காலமானார் என்பதையும் அவரது இறுதி நிகழ்வுகள் மறுதினம் அல்லைப்பிட்டி 3ஆம் வட்டாரத்தில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற்றது என்பதையும் அவரை நன்கு அறிந்த எமது ஊரவர்களுக்கு அறியத் தருகிறோம்.
ஆச்சிக்கு எமது அஞ்சலிகள் உரித்தாகட்டும். அவரது ஆத்மா இறைவன் திருவடி நிழலில் சாந்தி அடைவதாக. 💐🌸💮🏵🌹🌺🌻🌼🌷

திரு லிங்கதாசன் சொர்ணலிங்கம் அவரின் நினைவுப்பகிர்வு…

அவரை நாங்கள் சிறு வயது முதலே அவரது கணவரின் பெயரைக் கொண்டு ‘சங்கரப்பிள்ளை ஆச்சி’ என்றே அழைத்தோம் என்பது மட்டும் ஞாபகம். அவரது பெயர் ‘பூரணம்’ என்பது அவர் இறந்த பின்பே தெரிய வந்தது.
அன்னார் அல்லைப்பிட்டி மூன்றாம் வட்டாரத்தைச் சேர்ந்த கந்தசாமி, சுப்பிரமணியம்(லாரி டிரைவர்) அவர்களின் மனைவி தவலட்சுமி மற்றும் செல்லத்துரை தங்கலட்சுமி ஆகியோரின் மாமியாரும், ரதி, கண்ணன், ஜெயா, மகேந்திரன், ரவீந்திரன், ரவிக்குமார், ரஜிக்குமார், ரமேஷ்குமார், ரவீந்திரராசா, சிவரூபி, சிவசத்தியவாணி, கண்ணன், ரூபன், குமார் ஆகியோரின் அன்புப் பேர்த்தியும் ஆவார்.
######################
ஆச்சியிடம் உணவு உண்டு பசியாறிப் போன வேறு ஊரைச் சேர்ந்த ஒரு நல்ல இதயத்தின் பதிவு இது:
//எனது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக் கொள்கிறேன்
நான் புலம் பெயர்வதற்கு முன்பு நிறையவே அவருடன் அளவளாவியும் உள்ளேன் சங்கரப்பிள்ளை ஆச்சி அதுமட்டும் ஊருக்கு தெரியும் இவர்களுக்கு பிள்ளைகள் இல்லை மாவீரன் (கொடி)ரவிக்குமார் அவர்களின் தாயார் வளர்ப்பு மகள் ஆவார், இவர் அரிவு வெட்டும் பணிகளில் ஈடுபட்டும்போது பல பழமைவாய்ந்த அரிவுவெட்டும் பாடல்களை பாடுவார் கேட்கவே மகிழ்ச்சியாக இருக்கும், சிலதடவடைகள் ஊர் சென்றபோதும் இவரை தேட மறந்து விட்டேன் காரணம் இவர் இறந்திருப்பார் என நினைத்து விட்டேன் ,பல தடவைகள் இவர் கைகளால் இடியப்பம் உட்கொண்ட ஞாபகம் ! இவரது ஆத்மா சாந்தி அடையட்டும்//

Leave a Reply

WordPress Appliance - Powered by TurnKey Linux