
பிரான்ஸில் வசிக்கும்,அல்லையூர் அறப்பணிக்குடும்ப உறுப்பினரின் பிறந்தநாளை முன்னிட்டு-இந்நிதியுதவி வழங்கி வைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கதாகும்.
திருமதி கண்ணன் மஞ்சுளா அவர்கள்,கடந்த 2009ம் ஆண்டு நடைபெற்ற, இறுதி யுத்தத்தின்போது முள்ளிவாக்காலில் எறிகணைத் தாக்குதலில் முதுகுப்பகுதியில் காயம் அடைந்துள்ளதுடன்- இவரது உடலில் இன்றும் எறிகணைச் சிதறல்கள் உள்ளதாகவும், இவ்வெறிகணை சிதறல் துண்டினால் ஏற்பட்ட பாதிப்பினால் தான் புற்று நோய் தாக்கத்திற்கு இவர் உள்ளாகியுள்ளதுடன் மேலும் நெஞ்சுப்பகுதியில் சத்திர சிகிச்சை செய்யப்பட்டதுடன் -தெல்லிப்பளை மருத்துவமணையில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றார்.
இவரது சிகிச்சைக்கு மேலதிகமாக பணம் தேவைப்படுவதனால்,கருணையுள்ளம் கொண்டவர்கள் உதவிட முன்வருமாறு வேண்டுகின்றோம்.

