உலக அறிவு ஒவ்வொரு கிராமத்திற்கும் என்னும் நோக்கோடு அறிவக செயற்திட்டமானது நாடளாவிய ரீதியின் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. தீவகம் உட்பட யாழ்மாவட்டத்தின்ஏனைய பகுதிகளிலும் கடந்து மாதம் 16,17 ஆம் திகதிகளில்இலங்கை தொலைத்தொடர்புகள் மற்றும் தகவல் தொழில்நுட்பவியல்அமைச்சர் கௌரவ ரஞ்சித் சியம்பலாபிட்டிய அவர்களால் இத்திட்டம் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
அல்லைப்பிட்டி பராசக்தி வித்தியாலயத்திற்கு முன்பாக அமைந்துள்ள-கட்டிடத்திலேயே இத்திட்டத்தின் செயற்பாடுகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.இங்கு….
கணனி பயிற்சி வகுப்புக்கள்
ஆங்கில பாட வகுப்புக்கள்
கணனி அச்சிடல்
லெமனேற்றிங்
பைண்டிங்
கணனி திருத்துதல் —போன்ற வகுப்புக்கள் நடைபெற்று வருகின்றது.
தீவகம் தெற்கு அறிவகத்தின் தகவல் தொழில்நுட்ப சேவையை அல்லைப்பிட்டி கிராமத்திலேயே பெற்று பயன்பெறுங்கள்.
மேலதிக தகவல்களுக்கு
திட்ட முகாமையாளர்
தீவகம் தெற்கு அறிவகம்
அல்லைப்பிட்டி
தொலைபேசி 0777 422 109