
சுவிஸில் காலமான,மண்டைதீவைச் சேர்ந்த, சமூக ஆர்வலரும், மண்டைதீவு இணையத்தளத்தின் இயக்குனருமான,அமரர் சிவப்பிரகாசம் சிவசிறிகுமரன் அவர்களின் 2ம் ஆண்டு நினைவு தினம் (திதி) 30.10.2020 வெள்ளிக்கிழமையாகும்.
அன்னாரின் நினைவு தினத்தை முன்னிட்டு, அல்லையூர் அறப்பணி குடும்பத்தினரின் ஏற்பாட்டில், கிளிநொச்சி மகாதேவா சுவாமிகள் சிறுவர் இல்ல மாணவர்களுக்கு மதியச்சிறப்புணவும்-தருமபுரத்தில் அமைந்துள்ள நமச்சிவாய மூதாளர் பேணலகத்தில் வசிக்கும்-முதியோர்களுக்கு முழுநேரச் சிறப்புணவும் வழங்கப்பட்டது.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல, மண்டைதீவு வேப்பந்திடல் முத்துமாரி அம்மனை வேண்டி நிற்கின்றோம்.
ஓம் சாந்தி…














