மண்கும்பானைச் சேர்ந்த,அமரர் திருமதி சோமசுந்தரம் சிவகாமிப்பிள்ளை அவர்களின் 2ம்ஆண்டு நினைவுதின அறப்பணியின் நிழற்படங்கள் இணைப்பு!

மண்கும்பானைச் சேர்ந்த,அமரர் திருமதி சோமசுந்தரம் சிவகாமிப்பிள்ளை அவர்களின் 2ம்ஆண்டு நினைவுதின அறப்பணியின் நிழற்படங்கள் இணைப்பு!

அல்லையூர் அறப்பணி குடும்பத்தினரால் ஆதரவற்ற மாணவர்களுக்கான, அன்னதானப்பணியும்,செஞ்சோலை மாதிரிக்கிராம மக்களுக்கான உலர்உணவுப் பொருட்கள் வழங்கிய நிகழ்வும் முன்னெடுக்கப்பட்டது.

பிரான்ஸில் காலமான,தீவகம் மண்கும்பானைச் சேர்ந்த, அமரர் திருமதி சோமசுந்தரம் சிவகாமிப்பிள்ளை அவர்களின் 2ம் ஆண்டுத் திதியை முன்னிட்டு, 29.10.2020 வியாழக்கிழமை அன்று-அல்லையூர் அறப்பணிக் குடும்பத்தினரின் ஏற்பாட்டில், கிளிநொச்சியில் அமைந்துள்ள, மகாதேவா சுவாமிகள் சிறுவர் இல்ல மாணவர்களுக்கு சிறப்புணவு வழங்கப்பட்டதுடன் மேலும் கிளிநொச்சியில் அமைந்துள்ள செஞ்சோலை மாதிரிக் கிராமத்தில், வசிக்கும்,33 குடும்பங்களுக்கு மொத்தம் 50 ஆயிரம் ரூபாய்கள் பெறுமதியான உலர் உணவுப் பொருட்களும் வழங்கி வைக்கப்பட்டன.

அமரர் திருமதி சோமசுந்தரம் சிவகாமிப்பிள்ளை அவர்களின் ஆத்மா சாந்தியடைய, எல்லாம் வல்ல மண்கும்பான் வெள்ளைப்புற்றடி வீரகத்தி விநாயகப் பெருமானை வேண்டி நிற்கின்றோம்.
ஓம் சாந்தி… ஓம் சாந்தி… ஓம் சாந்தி…

அல்லையூர் அறப்பணிக்குடும்பத்தினரால்,தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வரும்-அன்னதானப்பணிக்கும்,அறப்பணிக்கும்,புலம்பெயர் தமிழ்மக்கள் பேராதரவு வழங்கி வருவது குறிப்பிடத்தக்கதாகும்.

அமரர் திருமதி சோமசுந்தரம் சிவகாமிப்பிள்ளை அவர்களின் நினைவாக வழங்கப்பட்ட சிறப்புணவு நிகழ்வானது 1094 வது தடவையாக முன்னெடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கதாகும்.

Leave a Reply

WordPress Appliance - Powered by TurnKey Linux