
சிறப்பு அன்னதான நிகழ்வு…
அமரர் செல்லத்துரை (உடையார்) நடேசபிள்ளை அவர்களின் நினைவாக,கடந்த ஒரு வருடமாக,அல்லையூர் அறப்பணிக்குடும்பத்தினரின் ஏற்பாட்டில், தாயகத்தில் மாதம் ஒரு தடவை என அன்னதானம் வழங்கப்பட்டு வந்தது.இப்பணியினை தொடர்ந்தும் முன்னெடுக்குமாறு,ஜயாவின் குடும்பத்தினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
ஜயாவின் முதலாம்ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு இரண்டு இடங்களில் சிறப்புணவு வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
எங்களூர் பெரியவர் அமரர் அமரர் செல்லத்துரை (உடையார்) நடேசபிள்ளை அவர்களின்ஆத்மா சாந்தியடைய,எல்லாம் வல்ல இனிச்சபுளியடி முருகப்பெருமானை வேண்டி நிற்கின்றோம்.
ஓம் சாந்தி ..ஓம் சாந்தி..ஓம் சாந்தி…





