வேலணை சாட்டி சிந்தாத்திரை மாதாவின்  வருடாந்த பெருநாள் விழாவின் முழுமையான வீடியோ -நிழற்படங்களின் இணைப்பு!2020

வேலணை சாட்டி சிந்தாத்திரை மாதாவின் வருடாந்த பெருநாள் விழாவின் முழுமையான வீடியோ -நிழற்படங்களின் இணைப்பு!2020

யாழ்.மாவட்­டத்­தி­லுள்ள கத்­தோ­லிக்க யாத்­திரைத் தலங்­களில் ஒன்­றான -வேலணை சாட்டி சிந்­தாத்­திரை மாதாவின் வரு­டாந்தத் திரு­விழா கடந்த   –  17 -09-2020   வியா­ழக்­கி­ழமை அன்று மாலை கொடி­யேற்­றத்­துடன் ஆரம்­பமாகி தொடர்ந்து நவநாட் திருவிழாக்கள் நடைபெற்று 26-09-2020   சனிக்கிழமை காலை 7 மணிக்கு யாழ் மறைமாவட்ட ஆயர் பேரருட் திரு ஜஸ்ரின் ஞானப்பிரகாசம் ஆண்டகை அவர்களின் தலை­மையில் கூட்டுத் திருப்­பலியும் அதனைத் தொடர்ந்து சிந்தாத்திரை மாதாவின் திருச்­சுரூப பவ­னி­யும் இடம் பெற்றது.

அன்னையின் அருளாசி வேண்டி தீவகம்  மற்றும் யாழ் குடாநாட்டின்  பல பகுதிகளிலிருந்தும் ஆயிரக்கணக்கான மக்கள் ஆலயத்திற்கு வந்திருந்து அன்னையை வழிபட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
அல்லையூர் இணையத்தினால் பதிவு செய்யப்பட்ட பெருநாள் விழாவின்  நிழற்படங்கள் வீடியோப்பதிவு ஆகியவற்றினை உங்கள் பார்வைக்கு கீழே இணைத்துள்ளோம்.

அல்லையூர் இணையத்தின் நிதி அனுசரணையில், சிந்தாத்திரை அன்னைக்கு,முதல்தடவையாக,வேலணையூர் சசி பாலா இயற்றிய பாடல் ஒன்று ஒலிப்பதிவு செய்யப்பட்டு சிடியாக வெளியிட்டுவைக்கப்பட்டது.

Leave a Reply

WordPress Appliance - Powered by TurnKey Linux