படங்களில் அழுத்தி பெரிதாக்கிப் பார்வையிடுங்கள்
கரம்பனை பிறப்பிடமாகவும்-அல்லைப்பிட்டி முதலாம் வட்டாரத்தை,வசிப்பிடமாகவும் கொண்டிருந்த,சின்னத்துரை சிவலிங்கம் அவர்கள் 30-11-2013 சனிக்கிழமை அன்று அல்லைப்பிட்டியில் காலமானார்.அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 01-12-2013 ஞாயிறு அன்று அல்லைப்பிட்டியில் நடைபெற்றது.
அல்லையூர் இணையத்தினால் பதிவு செய்யப்பட்ட நிழற்படங்களை-கீழே உங்கள் பார்வைக்கு இணைத்துள்ளோம்.
அன்னார் காலஞ்சென்ற,சின்னத்துரை-சிவக்கொழுந்து தம்பதியினரின் அன்பு மகனும்-காலஞ்சென்ற,சுவாமிநாதன்-நாகம்மா தம்பதியினரின் அன்பு மருமகனும்- சௌந்தரலட்சுமியின் அன்புக்கணவரும்-ஜனேந்திரன்(இந்திரன் பிரான்ஸ்)மற்றும் காலஞ்சென்ற ஜனனியின் பாசமிகு தந்தையும்-பானுமதியின் அன்பு மாமனாரும்-தருமலிங்கம்-நடராசா அகியோரின் அன்புச் சகோதரரும்-பாக்கியம்-மற்றும் காலஞ்சென்ற கமலாம்பாள் (மலர்)ஆகியோரின் அன்பு மைத்துனரும்-பூபாலசிங்கத்தின் அன்புச் சகலனும்-காலஞ்சென்ற,கஜேந்திரனின் (பாலன்)அன்பு சிறிய தந்தையும் -சச்சினின் அன்புப் பேரனுமாவார்.
அன்னாரின் ஈமைக்கிரியை,01-12-2013 ஞாயிற்றுக்கிழமை பகல்-அல்லைப்பிட்டியில் அமைந்துள்ள அன்னாரின் இல்லத்தில் நடைபெற்று-பின்னர் அல்லைப்பிட்டி இந்து மயானத்தில் தகனகிரியை நடைபெறும்.
இவ்வறிவித்தலை,உற்றார்-உறவினர்கள்-நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றார்கள்.
தொடர்புகளுக்கு