நெடுந்தீவு யுவதி மன்னாரில்  கொலை,அதிரவைக்கும் திடீர் திருப்பம்-படியுங்கள்!

நெடுந்தீவு யுவதி மன்னாரில் கொலை,அதிரவைக்கும் திடீர் திருப்பம்-படியுங்கள்!

மன்னார் – சௌத்பார் பகுதியில் உள்ள உப்பள உப்பு உற்பத்தி பாத்தியில் இருந்து கடந்த 13ம் திகதி சடலமாக மீட்கப்பட்ட யுவதியின் கொலை தொடர்பில் குறித்த யுவதியின் சகோதரி உட்பட இரு பெண்கள் மன்னார் பொலிஸரின் உதவியுடன் கைது செய்யபட்டுள்ளனர்.
சடலமாக மீட்கப்பட்ட பெண் நெடுந்தீவை சேர்ந்த டொறிக்கா ஜூயின் (21-வயது) என்பதும், அவர் கொலை செய்யப்பட்டார் என்பதும் கண்டறியப்பட்ட நிலையிலேயே சந்தேக நபர்களான இந்த இரண்டு பெண்களும் நெடுந்தீவில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.
சட்ட மருத்துவ அதிகாரியின் அறிக்கையின் படி யுவதியின் கழுத்து நெரிக்கப்பட்டு, அவரது கால்கள், கைகள் பிடித்து வைத்திருக்கப்பட்ட நிலையில் மூச்சுத் திணறலால் உயிரிழந்துள்ளார் என்று கூறப்பட்டுள்ளது.
பொலிஸார் புலன் விசாரணைகளை முன்னெடுத்த போது மன்னாரில் உள்ள உணவகம் ஒன்றில் கொல்லப்பட்ட யுவதி, இரு பெண்கள் மற்றும் ஆண் ஒருவரும் சென்று உணவு உட்கொண்ட காட்சி பதிவாகியிருந்தது. அந்தக் காட்சியைப் பெற்ற பொலிஸார், விசாரணைகளை முன்னெடுத்தனர். ஆரம்பத்தில் அந்தப் பெண்கள் நாவற்குழி என்று தெரிவிக்கப்பட்டது. ஆனால் அங்கு அவர்கள் இல்லை. தொடர்ச்சியாக முன்னெடுத்த விசாரணைகளில் கொல்லப்பட்ட பெண் நெடுந்தீவைச் சேர்ந்தவர் என்று தெரிவிக்கப்பட்டது.
அதனடிப்படையில் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளில் கொல்லப்பட்ட இளம் யுவதியின் சகோதரி (வயது-30), அவரது பெரியதாயின் மகனின் மனைவி ஆகிய இருவருமே நெடுந்தீவில் வைத்து நேற்று (21) கைது செய்யப்பட்டனர்.
அத்துடன், தலைமறைவாகியுள்ள 50 வயதுடைய பிரதான சந்தேக நபரான கொல்லப்பட்ட பெண்ணின் மாமனார் தேடப்பட்டு வருகிறார்.
கொலை பின்னணி,
“சகோதரியின் கணவருக்கும் கொல்லப்பட்ட இளம் பெண்ணுக்கும் இடையே தொடர்பு உள்ளதாக அவரது சகோதரி சந்தேகம் கொண்டுள்ளார். இந்தச் சந்தேகத்தால் சகோதரிகள் இடையே முரண்பாடு நீடித்துள்ளது.
இளம் பெண்ணின் தந்தை காலமாகிய நிலையில் தாயார் வெளிநாட்டில் உள்ளார். அவரது தாயின் சகோதரன் செட்டிக்குளத்தில் உள்ளார். அவர் வெளிநாட்டு முகவர் நிலையத்துடன் தொடர்புடையவர். அதனால் கொல்லப்பட்ட இளம் பெண்ணை வெளிநாட்டுக்கு அனுப்புவதாகக் கூறியுள்ளார்.
அதனால் கொழும்பில் சில ஆவணங்கள் கையளிக்கவேண்டும் என்று தெரிவித்து சகோதரிகள் இருவரையும் அவர்களது பெரியதாயின் மகனின் மனைவியையும் அழைத்துக் கொண்டு மன்னார் பயணித்துள்ளார். அங்கு நகரில் நடமாடிவிட்டு உப்பளத்தில் எவரும் இல்லை என அறிந்து இளம் பெண்ணை மூவரும் அங்கு அழைத்துச் சென்றுள்ளனர்.
அங்கு மாமன் கழுத்தை நெரிக்க மற்றைய இரு பெண்களும் கால்களையும் கைகளையும் பிடித்துவைத்திருந்துள்ளனர். உயிர் பிரிந்ததும் அங்கிருந்து தப்பித்துள்ளனர்” – என்பது விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

Leave a Reply