டென்மார்க்கில் அகால மரணமான,சக்திதாசன் சிவசரணம்(ராஜன்) அவர்களின் இறுதி நிகழ்வுகள் பற்றிய விபரங்கள் இணைப்பு!

டென்மார்க்கில் அகால மரணமான,சக்திதாசன் சிவசரணம்(ராஜன்) அவர்களின் இறுதி நிகழ்வுகள் பற்றிய விபரங்கள் இணைப்பு!

துயர் பகிர்வு…
எமது அன்புக்குரியவரும்,
எமது அறப்பணிக்கு தொடர்ந்து உதவி வந்தவருமாகிய, டென்மார்க்கில் வசிக்கும்,மண்டைதீவு 2ம் வட்டாரத்தைச் சேர்ந்த, சக்திதாசன் சிவசரணம் (ராஜன் ) அவர்கள் டென்மார்க்கில் அகால மரணமானார்,என்ற செய்தியினை ஆழ்ந்த வருத்தத்துடன் அறியத் தருகின்றோம்.
அன்னார், அல்லைப்பிட்டி கிழக்கைச் சேர்ந்த,திரு தி.பரஞ்சோதிநாதன் அவர்களின் மைத்துனர் (மனைவியின் சகோதரர்) ஆவார்.

அண்ணா..
உங்கள் திடீர் மறைவை என்னால்,நம்ப முடியவில்லை…
என்னுடன் தான் நீங்கள் இறுதியாக பேசினீர்களோ என்று என் மனம் எண்ணுகிறது.
கடந்த ஞாயிற்றுக்கிழமை மதியம் அரைமணி நேரத்திற்கும் மேலாக, என்னுடன் அறப்பணி முதல் அரசியல் வரை உரையாடினீர்களே அண்ணா…
என்னை உற்சாகப்படுத்திய முதல் ஆளும் நீங்கள் அல்லவா…
இதயம் துடிக்கிறது…
உங்கள் அகால மரணத்தை, அப்பன் தெரிவித்த போது… என்னை அறியாமலேயே வீறிட்டு அழுது விட்டேன் அண்ணா..
பிறந்த ஊருக்கும்,
அல்லையூர் இணையத்தின் அறப்பணிக்கும், தொடர்ந்து உதவி வந்த உங்களை இறைவன் ஏன் இவ்வளவு சீக்கிரம் அழைத்து விட்டான் அண்ணா..
இச்செய்தி பொய்யாகி இருக்கக்கூடாதோ என்று என் மனம் நினைக்கிறது.
உங்கள் ஆத்மா சாந்தியடைய,கண்ணீரோடு மண்டைதீவு முத்துமாரி அம்மனை வேண்டி நிற்கின்றோம்.
ஓம் சாந்தி..

Leave a Reply