
தலமெங்கும் மணிய திரும்
தெங்குமா வேம்பு கவிபாடும்
ஆலமரம் கிளை அசைந்தால்
ஆடும் மயில் தோற்றுவிடும்.
கால மகள் கண்ணசைத்தால்
கற்பகமும் கனிசொரியும்.
கோல வான் முகில் கூட்டம்
குயிலிசையில் மூழ்கி நிற்கும்.
காலபோக பயிர்கள் மேலே
கண்மணிபோல் பனி படரும்
ஏலமகள் அல்லிராணியின்
ஏற்றமிகு அல்லைப்பிட்டி.
இயற்றியவர்…
அமரர் சேவியர் வில்பிரட்(பாலன் சேவியர்)

