அனலைதீவு, எழுவைதீவு மக்களின் உயிராபத்து நிறைந்த கடல் பயணம்,எழுதாரகை எப்போது மீண்டும் சேவையில்???

அனலைதீவு, எழுவைதீவு மக்களின் உயிராபத்து நிறைந்த கடல் பயணம்,எழுதாரகை எப்போது மீண்டும் சேவையில்???

எழுதாரகை’ படகுச் சேவை மீண்டும்  ஆரம்பிக்கப்படுவது எப்போது?

யாழ் ஊர்காவற்றை கண்ணகை அம்மன் இறங்குதுறையில் இருந்து அனலைதீவு மற்றும் எழுவை தீவுக்கான சேவையில் ஈடுபட்டு வந்த ‘எழுதாரகை’ பயணிகள் படகு சேவை நீண்ட காலமாக நிறுத்தப்பட்டுள்ளதால் தாங்கள் பெரும் சிரமங்களை எதிர்கொள்வதாக தீவக மக்கள் தெரிவித்துள்ளனர்.
யாழ்ப்பாணம் மாவட்டத்தின் தென்மேற்கு பகுதியில் அமைந்துள்ள தீவுகளுக்கான கடற்போக்குவரத்து தீர்க்கப்படாத பிரச்சினைகள் நிறைந்ததாகவே உள்ளது. அப்பயணம் ஆபத்தான பயணமாகவே காணப்படுகின்றது.
எழுவைதீவு மற்றும் அனலைதீவு ஆகியவற்றுக்கான போக்குவரத்துக்கள் அன்று தொடக்கம் இன்றுவரை பாரிய ஆபத்தானதாகவே காணப்படுகின்றன.அதாவது ஊர்காவற்துறை பிரதேசசெயலர் பிரிவின் கீழுள்ள அனலைதீவின் இரண்டு கிராம அலுவலர் பிரிவுகளிலும், எழுவைதீவில் உள்ள ஒரு கிராம அலுவலர் பிரிவிலும் வாழும் 800 இற்கும் மேற்பட்ட குடும்பங்களின் நன்மை கருதி ‘எழுதாரகை’ என்ற பயணிகள் போக்குவரத்து படகு கடந்த 2017ம் ஆண்டு சேவையில் ஈடுபடுத்தப்பட்டது.
அந்தச் சேவை இப்போது மாதக்கணக்கில் கைவிடப்பட்ட நிலையில் மேற்படி தீவுகளில் உள்ள மக்கள் தனியார் படகுகளில் ஆபத்தான பயணங்களை மேற்கொள்ளும் நிலைமையில் உள்ளனர்.

Leave a Reply

WordPress Appliance - Powered by TurnKey Linux