புதன் மாலை பூநகரி,சங்குப்பிட்டி பாலத்தில் இடம்பெற்ற விபத்தில் மூவர் படுகாயம்….

புதன் மாலை பூநகரி,சங்குப்பிட்டி பாலத்தில் இடம்பெற்ற விபத்தில் மூவர் படுகாயம்….

கிளிநொச்சி – பூநகரி, சங்குப்பிட்டி பாலத்துக்கு அருகில் இன்று (08.07.2020) மாலை இடம்பெற்ற விபத்தில் மூவர் படுகாயமடைந்துள்ளனர்.
இவர்கள் யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மணல் ஏற்றிவந்த டிப்பர் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து முச்சக்கர வண்டியுடன் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
இதன்போது முச்சக்கர வண்டி முழுமையாக சேதமடைந்துள்ளது
சம்பவத்தில் கிளிநொச்சியை சேர்ந்த யோ.பிரியதர்சன் (25-வயது), உதயநகரை சேர்ந்த ப.தர்சிகன் (24-வயது), ஆனந்தபுரத்தை சேர்ந்த எஸ்.செல்வகுமார் (24-வயது) ஆகியோரே காயமடைந்துள்ளனர்.

Leave a Reply