அல்லையூர் இணையத்தின் இயக்குனர் சிவா செல்லையாவின் பிறந்தநாளை முன்னிட்டு,நடைபெற்ற அறப்பணி நிகழ்வுகள்….

அல்லையூர் இணையத்தின் இயக்குனர் சிவா செல்லையாவின் பிறந்தநாளை முன்னிட்டு,நடைபெற்ற அறப்பணி நிகழ்வுகள்….

அல்லையூர் இணையத்தளத்தின் இயக்குனரும்,அல்லையூர் அறப்பணிக் குடும்பத்தினரின் இணைப்பாளருமாகிய, பிரான்ஸில் வசிக்கும்,அல்லைப்பிட்டியைச் சேர்ந்த,திரு சிவா செல்லையா அவர்களின் 53 வது பிறந்தநாளை முன்னிட்டு,02.07.2020 வியாழக்கிழமை அன்று பல அறப்பணிகள் முன்னெடுக்கப்பட்டன.
அவை பின்பருமாறு….
01-அல்லைப்பிட்டி மூன்றுமுடி அம்மன் ஆலயத்தில் விஷேட அபிஷேகமும்,அன்னதானமும் இடம்பெற்றது.
02-அல்லைப்பிட்டி புனித கார்மேல் அன்னை ஆலயத்தில்,மெழுகுதிரி ஏற்றி வழிபாடு செய்யப்பட்டது.
03-கிளிநொச்சி மகாதேவா சுவாமிகள் சிறுவர் இல்ல மாணவர்களுக்கு காலைச் சிறப்புணவு வழங்கப்பட்டது.
04-தருமபுரத்தில் அமைந்துள்ள நமச்சிவாய மூதாளர் பேணலகத்தில் வசிக்கும்,முதியவர்களுக்கு முழுநேரச் சிறப்புணவு வழங்கப்பட்டது.
05-அம்பாறையில் அமைந்துள்ள அம்மன் மகளிர் இல்ல மாணவர்களுக்கு முழுநேரச் சிறப்புணவு வழங்கப்பட்டது.
06-தமிழகம் கோயம்புத்தூர் மாநகராட்சி காப்பகத்தில் வசிக்கும்,முதியவர்களுக்கு முழுநேரச் சிறப்புணவு வழங்கப்பட்டது.
07-கிளிநொச்சியில் அமைந்துள்ள விஷேட தேவைக்குட்பட்ட வலையமைப்பு இல்லத்தில் வசிக்கும்,தெய்வக் குழந்தைகளுக்கு முழுநேரச் சிறப்புணவு வழங்கப்பட்டது.
08-கிளிநொச்சியில் உயர்தரம் கற்கும்,தந்தையை இழந்த ஒரு மாணவிக்கு பாடசாலை சென்று வர,துவிச்சக்கர வண்டி ஒன்றும் வழங்கி வைக்கப்பட்டது.
மேலும் வறுமையில் வாடும்,இரண்டு குடும்பங்களுக்கு நிதியுதவியும் வழங்கி வைக்கப்பட்டன.

Leave a Reply